பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மக்கள் சங்கமம்

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில்  மக்கள் சங்கமம் 

ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை சேரான் தெருவில் ஷஹீத் மரக்கடை கமாலுதீன் திடலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மக்களாட்சி யை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மக்கள் சங்கமும் மாநாடு 8.7.22 அன்று மாலை 5 மணிக்கு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மகாநாட்டில் கொடியேற்றம், புரட்சிப் பாடல், நாடகம், வினாடி வினா போட்டி உடற்பயிற்சி மற்றும் வரலாற்று ஆசிரியர்களை கௌரவப்படுத்துதல் வெளிநாடு சென்று பல்வேறு பதக்கங்களை வென்றவர்களை கௌரவப்படுத்துதல், பரிசளித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. கீழக்கரை நகர் தலைவர் அகமது கபீர் தலைமையேற்றார். ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். எஸ்டிபிஐ. கட்சியின் கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான் வரவேற்றார். 

மேற்கு நகரத் தலைவர் ஹமீது பைசல் வாழ்த்துரை வழங்கினார். கீழக்கரை நகராட்சி தலைவர் எஸ்.செகனஸ் ஆபிதா மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் எஸ். சக்கினா பேகம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினரர்.மாநில துணைத்தலைவர் பி. அப்துல் ஹமீது சிறப்புரையாற்றினார் மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஜஹாங்கிர் அருஸி ஆலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாநாட்டு குழு தலைவர் M.அஹமது சாலிஹ்.நன்றியுரை கூறினார்..இதில் கீழக்கரை பொதுமக்கள் , ஜமாத்தார்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் நிருபர் M.N. அன்வர் அலி,N.A. ஜெரினா பானு