கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம்
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் வலியுறுத்தி பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப பெண்களுக்கு கவுரவ தொகையாக மாதம் ஆயிரம் வழங்க படும். சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை, தடையற்ற மின்சாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஆனால் வாக்குறுதிக்கு மாறாக போலீஸ் லாக்கப் டெத், கொலை கொள்ளை, மின் தட்டுபாடு, அதிமுக கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களான தாலிக்கு தங்கம், இலவச மோட்டார் சைக்கிள், போன்ற பல்வேறு திட்டங்களை நிறுத்தி உள்ளது. மக்களை வஞ்சிக்கும் வகையில் விலைவாசி ஏற்றம், மக்கள் நல திட்டங்களில் ஊழல்கள் என அனைத்திலும் மனசாட்சி இல்லாத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இந்த மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்த பட்டதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் முனிராஜ், தலைவர் சிவ பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், மாவட்ட
பொது செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் சங்கர், மின்னல் சிவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் K மூர்த்தி