திராவிட மாடல் பயிற்சி பாசறை* கூட்டம்

 திராவிட மாடல் பயிற்சி பாசறை* கூட்டம்


திமுக தலைவர் தமிழக முதல்வர் *மாண்புமிகு தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. *உதயநிதி ஸ்டாலின்mla* அவர்களின் வழிகாட்டுதல் படியும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. *Y.பிரகாஷ்mla* அவர்களின் ஆலோசனை படியும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள *திராவிட மாடல் பயிற்சி பாசறை* கூட்டம் ஆனது நாளை(31/07/2022) ஞாயிறு காலை 9.30மணி அளவில் ஓசூர் சட்டமன்றத் தொகுதி, ஓசூர் மாநகரம் மீரா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த பாசறை கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் திரு. *தமிழன் பிரசன்னா* அவர்கள் *திராவிட இயக்க வரலாறு* என்ற தலைப்பிலும், தலைமைக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் திரு. *ராஜீவ் காந்தி அவர்கள்* *மாநில சுயாட்சி* என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்ற உள்ளார்கள்.

இந்த இருவரின் உரையும் நம் ஒவ்வொருவரும் திராவிட இயக்க வரலாற்றையும், மாநில சுயாட்சி கொள்கையையும் முழுவதுமாக அறிந்து கொள்ளும்படி உரையாற்ற இருப்பதால் ஓசூர் மாநகரத்திற்குட்பட்ட 45-வார்டு கழக செயலாளர்கள், வார்டு இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களையும் கழக பற்றாளர்களையும், கழக தோழர்களையும் இந்த நிகழ்ச்சியில் தவறாமல் பங்கெடுக்கச்செய்து பயனடையச்செய்யுமாறு ஓசூர் மாநகர திமுக சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மிகவும் பயனுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு  மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 இவண்;

 S A. சத்யா, ஓசூர் மாநகர கழக பொறுப்பாளர், ஓசூர் மாநகராட்சி மேயர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்.

Hosur Reporter. E.V. Palaniyappan