சாக்கடைகள்,செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையிலிருந்து பாதுகாத்திட கருத்து பட்டறை:

 சாக்கடைகள்,செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையிலிருந்து பாதுகாத்திட  கருத்து பட்டறை:


ஒசூரில், சாக்கடைகள்,செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையிலிருந்து பாதுகாத்திட மாநகராட்சி தூய்மை,சுகாதார பணியாளர்களுக்கு கருத்து பட்டறை: ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, மீரா மகாலில் மாநகர தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான கருத்துப்பட்டறை நடைப்பெற்றது

சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதிலிருந்து பணியாளர்களை காக்கும் வகையிலான கருத்துப்பட்டறை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தேசிய தூய்மை பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உதவியுடன் நடைப்பெறுகிறது

தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சிகளில் இந்த கருத்துப்பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன

ஒசூரில் நடந்த கருத்துப்பட்டறையில் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் கைகளால் மலம் அள்ளுவது,சாக்கடைகளை சுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் முறையான உபகரணங்களை பயன்படுத்தியே இதுப்போன்ற செயலில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்..

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்குனர் மோகன்ராம் அவர்கள் பங்கேற்று கைகளால் சுத்தம் செய்வதை தடுக்க மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படுவதை மக்கள், தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா மாமன்ற உறுப்பினர்கள் N.S.மாதேஷ்வரன், சென்னீரப்பா, இந்திராணி, சசிதேவ்,  பெருமாயி அருள், மம்தா சந்தோஷ், யஷ்ஸ்வினி மோகன்,   தேவி மாதேஷ், குரு  மஞ்சுளா, மாணவரணி அமைப்பாளர் ராஜா உடனிருந்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan