ஒசூர் அம்மா உணவங்களில் அதிரடி ஆய்வு மேற்க்கொண்ட மேயர்
ஒசூர் பேருந்துநிலையம், அம்மா உணவங்களில் அதிரடி ஆய்வு மேற்க்கொண்ட மேயர்: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அப்பாவு பிள்ளை பேருந்துநிலையத்தில் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் ஆணையாளர்,துணை மேயர் உள்ளிட்டோருடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்
தாய்மார்கள் பாலூட்டும் அறை,கழிவறைகளை பார்வையிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்திக்கொள்ள தூய்மை பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்
அதனைதொடர்ந்து ஒசூர் பேருந்துநிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு மேற்க்கொண்டு உணவு தயாரிக்கும் சமையலறை,உணவு பொருட்களை நேரடி பார்வையிட்டு பசியாற்றும் உண்ணதமான பணியினை முகசுழிப்பின்றி செய்திட வேண்டுமென பணியாளர்களை கேட்டுக்கொண்டார்
இந்நிகழ்வில் ஆணையாளர் பாலசுப்ரமணியம்,துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் மல்லிகா தேவராஜ், கிரண், மஞ்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Hosur Reporter. E.V. Palaniyappan