எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக தீர்மானம்.

 எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக தீர்மானம்.


*அதிமுகவிற்கு தலைமை தாங்க எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக தீர்மானம்.*

எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு தலைமை தாங்கி பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஒசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி பாகலூர் சாலையில் உள்ள அதிமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் ஒற்றைத்தலைமை நாயாகன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக வேண்டுமென தீர்மானம் வாசித்தார், அதனை தொண்டர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் கைகளைத்தட்டி வரவேற்றனர்

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா ரெட்டி:

தமிழகத்தில் 4ஆண்டுகள்  சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்..இன்றைய சூழலில், கட்சி தொண்டர்களின் கோரிக்கை ஒற்றை தலைமையாக உள்ளது

பொதுக்குழுவில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒற்றை தலைமையை கோரிக்கை வைக்கின்றனர்,அந்த ஒற்றைத்தலைமையை எடப்பாடி பழனிசாமி அவர்களை தான் ஏற்க வேண்டுமென விரும்புகின்றனர்

மீண்டும் தமிழக முதல்வராக வேண்டுமென இந்த ஒரு ஆண்டு திமுக ஆட்சியில் தமிழக மக்கள் யோசிக்க தொடங்கி உள்ளனர்

மீண்டும் இபிஎஸ் முதல்வராக வேண்டுமானால் ஒற்றை தலைமையாக இபிஎஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என பேட்டியளித்தார்

அப்போது மாவட்ட துணை செயலாளர் மதன்குமார், மாவட்ட துணை செயலாளர் அலமேலு,மாவட்ட பொருளாளர் கந்தன், பகுதி செயலாளர்கள் அசோகா,மஞ்சுநாத்,ராஜீ,வாசுதேவன், ஒன்றிய செயலாளர்கள் ஹரீஷ்ரெட்டி,ரவிக்குமார், சிவி ராஜேந்திரன் Ex.MLA, ஜெயபால்,கணேஷ்,பேரூராட்சி செயலாளர் ஜெயராமன்,ஒசூர் மாநகர 4வது மண்டலக்குழு தலைவர் ஜேபி என்கிற ஜெயக்குமார், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ராமு, சிட்டி என்கிற ஜகதீஸ்,சீனிவாசன்,கார்த்திக்,எம்பி இளஞ்சூரியன், மாமன்ற உறுப்பினர்கள் மஞ்சுநாத்,அசோகா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

ஓசூர் செய்தியாளர்:  E.V.பழனியப்பன்