முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல்: மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை.

 முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல்: மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை.

 ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்ட கழக செயலாளராகவும் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் கழக வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவரும் முன்னாள் அமைச்சருமான தெய்வத்திரு.வே. தங்கபாண்டியன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு ஆண்டுதோறும் மாவட்ட கழகம் நேரில் சென்று புகழஞ்சி செலுத்தி வருகிறது. இந்த ஆண்டும் வருகின்ற 31.7.22

 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் மாநில மாவட்ட தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி