அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஓசூர் எம்.எல்.ஏ. Y.பிரகாஷ் ஆதரவு

 அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஓசூர் எம்.எல்.ஏ. Y.பிரகாஷ் ஆதரவு...


பேரன்புமிக்க தோழர்களுக்கு வணக்கம்.

இன்று காலை 10.30.மணியளவில்  திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு Y.பிரகாஷ் MLA அவர்கள் அசோக்லேலண்டு யூனிட் 2 விற்கு  வருகைபுரிந்து 28 வது நாளாக நடைபெறும் நம் தொடர்  உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்தும் உண்ணாவிரதம் இருக்கும் தோழர்களுக்கு துண்டு அனிவித்து வாழ்த்துரை வழங்கினார்.அப்போது தொழிலாளர்களுக்குள் பிரச்சனைகளை அவர்களுக்குள் பேசியோ அல்லது போராடியோ தீர்க்கவேண்டும்.அதில் நிர்வாகம் எல்லாரையும் சமமாகத்தான் பார்க்கவேண்டும் ஒற்றுமை படுத்தவேண்டும். அதுபோல்தான் இங்கே நடக்கும் என நினைத்தோம்.ஆதலால்தான் நான் இதுநாள் வரை வரவில்லை.ஆனால் தற்போதைய நிகழ்வுகளை பார்க்கும் போது நிர்வாகம் இந்த விசயத்தில் ஒரு தலைபட்சமாக நடந்துள்ளது என அறிந்து உடனே இன்று நானே நேரில் வந்துள்ளேன்.இதற்கு மேலும் நிர்வாகம் நேர்மையாக நடக்காவிட்டால் நாங்கள் (அரசு தரப்பில்) தலையிடவேண்டியிருக்கும் என்பதை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு சுகுமாறன்,ஓசூர் முன்னால் நகர்மன்ற தலைவரும் இந்நாள் சுகாதாரத்துறை தலைவர் N.S மாதேஷ்வரன் MC தொரப்பள்ளி பஞ்சாயத்து செயல் தலைவர் திரு ராமு உள்ளிட்ட கழக பிரமுகர்களும் நம் குசேலர் அணியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் நம் அணியின் சங்கநிர்வாகிகள்  மாதவன், ஜோதியப்பா,இந்திரஜித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைவரையும் தொமுச செயலாளர் ராஜாராம் மற்றும் Dr MGR பேரவை செயலாளர் ஐய்யப்பன் வரவேற்றார்கள்.நமது அணியின் சார்பாக MLA உள்ளிட்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் தணிகைவேல் நலமன்றத்தின் நடைமுறை தலைவர் G.ராமர் நன்றி கூறினார்.

இவண்.

குசேலர் அணி யூனிட்  2