ராணிப்பேட்டையில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை
ராணிப்பேட்டை, ஜூன்0
ராணிப்பேட்டை நகராட்சியில் மக்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்தார். பின்னர் நகராட்சி, நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இதில் மக்கும் குப்பை தனியாகவும், மக்காதகுப்பை தனியாகவும் பிரித்து தருவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒருவகையில் என் குப்பை என் பொருப்பு எந்த மக்களின் சிந்தனையோடு ஆற்காடு நகரை சுற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித் தலைவர் பாஸ்கரபாண்டியன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைசெயலாளர் வினோத் காந்தி, மாவட்டமாணவரணி அமைப்பாளர் வினோத், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை திமுக மாவட்டஅலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கைத்தறி மற்றும்
துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்.
சுரேஷ்குமார் ராணிப்பேட்டை