ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் மரங்களை நடுவதே எங்கள் நோக்கம்.....

 ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் மரங்களை நடுவதே எங்கள் நோக்கம்.....

*ஐந்து ஆண்டுகளில் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் மரங்களை நடுவதே எங்கள் நோக்கம்-ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா உறுதி.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற மண்வளம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா, வரும் ஐந்தாண்டுகளில் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் மரங்களை நடுவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என உறுதியளித்தார்.

தனியார் நட்சத்திர ஓட்டலில் மண்- பாதுகாப்போம் இயக்கம் சார்பில் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. மண் வளம் காப்போம் இயக்க தன்னார்வலர் எஸ் நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா, புவியியல் மற்றும் சுரங்கத்துறை மாவட்ட உதவி இயக்குனர் பொன்மணி மற்றும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் பங்கேற்று மண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார்கள். 

முன்னதாக இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளான இன்று அவரை போற்றும் விதமாக டேலண்ட் டிரைப் இவெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முதல் கட்டமாக ஓசூரில் 15 ஆயிரம் மரங்களை நடுவதற்கான துவக்கமாக மரக்கன்றுகளை மேயர் வழங்கினார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் சத்யா, 

மண் மற்றும் மண் வளம் அதனை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன் இந்த இயக்கத்திற்கு ஓசூர் மாநகராட்சி சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் மேலும் வரும் ஐந்தாண்டுகளில் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்ப்பது என்ற நோக்கம், கொண்டுள்ளதாக உறுதி அளித்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எஸ் நரசிம்மன் கூறுகையில், 

இந்த ஆண்டு முதல் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவது என்ற துவக்கத்துடன், மியோ வாக்கிங் வாயிலாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை மாநகராட்சி சார்பில் நடுவதற்காக எங்கள் இயக்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளித்து ஓசூர் மாநகரை மரம் வளர்ப்பதில் ஒரு முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார்.

ஓசூர் செய்தியாளர்: E V. பழனியப்பன்