மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்



கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு பழிவாங்கும் நோக்குடன்  ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு தொடர் விசாரணை என்ற பெயரில் விசாரணை நடத்தி வருவதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவரும் மத்திய பாஜக அரசின் போக்கினைக் கண்டித்து மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி தலைமை தபால்நிலையம் முன்பாக நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது

இந்தக் கண்டன ஆர்பாட்டத்திற்கு முன்னால் மாவட்டத் தலைவர்கள் நாஞ்சில்ஜேசு, காசிலிங்கம், கிருஷ்ணமூர்தி, மாவட்டத் துணைத்தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் மோடியின் தலைமையிலான

மத்திய அரசு இளம் தலைவர் ராகுல் காந்தி மீது பழிவாங்கும் நோக்குடன் எந்த வழக்கும் கிடைக்காததால் போலியான ஒரு வழக்கை ஜோடித்து அமலாக்கத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் முன்னால் சேர்மன் ஆறுமுகம், நகர தலைவர் லலித் அண்டனி மாநில பட்டியல் அணி தலைவர் ஆறுமுக சுப்ரமணி. மாவட்ட செயலாளர்.ரமேஷ் அர்னால்டு.நகர்மன்ற உறுப்பினர். வினாயகம்.முபாராக்.மாவட்டத் துணைத்தலைவர் ரகமத்துல்லா, உள்ளிட்ட பலர் கலந்துக்

கொண்டு மோடிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்கள்.

 கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் கபிலன். தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Krishnagiri Reporter. K. Moorthy.