நீதிபோதனை பாடம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு ஜிகே மணி வலியுறுத்தல்

 நீதிபோதனை பாடம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு ஜிகே மணி வலியுறுத்தல்

தமிழகத்தில் பள்ளிகள் துவங்கிய நிலையில் நீதிபோதனை பாடம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு ஜிகே மணி வலியுறுத்தல்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது 

ஒரு தனிமனிதன் வளர்ச்சிக்கு, ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு,நாட்டின் மேம்பாட்டுக்கு அடித்தளமாக இருப்பது கல்வி. நாட்டின் வளர்ச்சி வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. வகுப்பறையில் தான் நாடு உருவாக்கப்படுகிறது. அப்படி வகுப்பறையில் உருவாக்கப்படுகின்ற மாணவர்கள் இன்று ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவது அடிப்பது திட்டுவது தாக்குவது, வகுப்பறை களிலேயே மது அருந்திக் கொண்டு போதைப்பொருட்களுக்கு ஆறாவது சீரழிவது மிக மிக வேதனை அளிக்கிறது. மிகவும் கொடுமையாக உள்ளது. ஒருபள்ளி மாணவப் பருவம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பருவம். இந்தப் பருவத்தில் என்ன ஆழமாக விதைக்கப்படுகிறது அதுதான் அவர்கள் மனதில் பதியும். எனவே மாணவர்களின் நலன் நாட்டின் நலன் ஆகும். நாட்டின் வளர்ச்சி மாணவர்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும். இன்றைய காலகட்டங்களில் மாணவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே இவைகளை நல்வழிப்படுத்த வேண்டுமானால், ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை கட்டாயம் நீதிபோதனை பாடத்தை ஏற்படுத்தி அதற்கென ஆசிரியர் நியமித்து தேர்வில் தேர்ச்சி பெற கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே, இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசி இருந்தபோதிலும் பள்ளிகள் துவங்கிய நாளான இன்று, மீண்டும் மீண்டும் தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்பேட்டியின்போது மேற்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் உடன் உள்ளார்.

 ஓசூர்  செய்தியாளர்: E.V.பழனியப்பன்