முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99- வது பிறந்த நாள்

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99- வது பிறந்த நாள்

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99- வது பிறந்த நாள் ஓசூர் மாநகர திமுக சார்பில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் Y.பிரகாஷ் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட, மாநகர, ஒன்றிய, வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓசூர் மாநகர திமுக சார்பில் ஓசூர் மாநகர பொறுப்பாளரும் ஓசூர் மாநகராட்சி மேயருமான S.A.சத்யா அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்