ஓசூரில் 40வது மாநில அளவிலான இளையோர் பிரிவு மாணவிகளுக்கான கோ-கோ விளையாட்டுப்போட்டி...

ஓசூரில் 40வது மாநில அளவிலான இளையோர் பிரிவு மாணவிகளுக்கான கோ-கோ விளையாட்டுப்போட்டி...


 புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒசூர் 40வது மாநில அளவிலான இளையோர் பிரிவு மாணவிகளுக்கான கோ-கோ விளையாட்டுப்போட்டி 2022

40-வது மாநில அளவிலான 18 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோ கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதி வரை ஒசூர் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டி இன்று காலை 11.00 மணியளவில் ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. அ. முனிராஜ் அவர்கள், ஒசூர் சிப்காட் பிரைடு அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா A. மல்லேஷ் அவர்கள். தமிழ்நாடு மாநில கோகோ கழகத்தின் பொதுச்செயலர் திரு. A. நெல்சன் சாமுவேல் அவர்கள், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு சக்திவேல் அவர்கள், துணை செயலாளர் மத்திகிரி திரு. அய்யாஸ் அவர்கள். காங்கிரஸ் மாநில செயலாளர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் மற்றும் புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளர் மற்றும் கிருஷ்ணகிரி வடக்கு கோ-கோ விளையாட்டு கழகத்தின் தலைவர் அன்னை ஏஞ்சலா அவர்கள் முன்னிலையில் துவக்கிவைக்கப்பட்டது.

இறுதிப் போட்டியில் சிவகங்கை மாவட்டமும் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டமும் கலந்து கொண்டன. சிவகங்கை மாவட்டம் முதலிடத்தையும், கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டம் இரண்டாமிடத்தையும், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மூன்றாமிடத்தையும் வென்றன. கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட அணியைச் சேர்ந்த மாலா Chaser பட்டத்தையும், இன்பதமிழரசி All Rounder பட்டத்தையும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜாய்ஸ் defender பட்டத்தையும் வென்றனர்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. அ. முனிராஜ் அவர்கள் மற்றும் புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளர் அன்னை ஏஞ்சலா அவர்கள் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தனர். இறுதியில் நாட்டுப்பண்ணுடன் போட்டிகள் இனிதே முடிந்தன.

Hosur Reporter. E. V. Palaniyappan