RTE மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்... சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க பெற்றோர்கள் கோரிக்கை....!

RTE மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்... சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க பெற்றோர்கள் கோரிக்கை....!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் நடப்பு கல்வியாண்டுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் இணையதள கோளாறு ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கோளாறை சரி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கும் நோக்கில் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும். ஆண்டுதோறும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதே போல 2022 – 2023 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்கியது. இத்திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அவர்கள் தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பபதிவு நடைபெற்று வரும் நிலையில் இணையதளத்தில் குளறுபடி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

பள்ளி தேர்வு என்ற இடத்தில் பள்ளிகள் பெயர் இடம் பெறவில்லை இதனால் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடிவதில்லை என்று குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். இன்னும் 10 நாட்களே மீதம் இருப்பதால் இது போன்ற தொழில்நுட்ப கோளாறுகளால் விண்ணப்பிக்க முடிவதில்லை. அதனால் விரைவாக விண்ணப்பிக்க ஏதுவாக இணையதள கோளாறை சரி செய்ய வேண்டும். RTE சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இவர்கள் அனைவருக்கும் இந்த ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

.  எனவே ஒவ்வொரு பள்ளியின் Intake Capacity Increase செய்தால் தான் இடம் கிடைக்கும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.  எனவே ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள  இடங்களின் எண்ணிக்கையை  அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்