ஏர்வாடியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா ஜூன்1.6.22 ம் தேதி துவங்குகிறது. இங்கு சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் அவர்கள் தர்ஹா உள்ளது. இது உலகப் புகழ் பெற்ற தர்ஹாவாகும்.இங்கு பில்லி, சூனியம், போன்ற நோய்களை குணப்படுத்தி செல்வதற்கு உலகில் பலதரப்பட்ட பகுதி களிலிருந்து நோயாளர்கள் வருகைதந்து நோயை குணமடைந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா வருகிற 848ம்ஆண்டு சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வருகிற ஜூன் 1.6.
22 புதன்கிழமை மாலை முதல் மௌலிது புகழ் மாலை ஓதும் நிகழ்ச்சி துவங்கி தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறுகிறது. ஜூன் 10ம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் தர்ஹாவின் உள்ளே பெரிய அளவிலான அடிமரம் நடும் நிகழ்ச்சியும் மிக விமரிசையாக நடைபெறுகிறது. மறு நாள் ஜூன் 11,6.22, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற உள்ளது. ஜூன் 23 ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை உரூஸ் (எ) சந்தனக்கூடு விழா துவங்கி மறுநாள் ஜூலை 24,6.22 வெள்ளிக்கிழமை அதிகாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்ஹாவை வந்தடையும்.பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் இருந்து புனித சந்தனம் பாதுஷா நாயகத்தின் மஹ்பராவில் பூசப்படும். ஜூன் 30,6.22 அன்று மாலையில் விழா நிறைவு செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்று,நார்ஸா வழங்கப்படும்.இதை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் கமிட்டியினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு