அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்...! பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்..!?
அடுத்த இருபது முதல் முப்பது ஆண்டுகளுக்கு பாஜகவை சுற்றியே இந்திய அரசியல் சுழலுமென அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிலவரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அந்த பேட்டியில் இந்திய அளவில் நீங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று விட்டால் உங்களை யாராலும் விரட்டியடிக்க முடியாது,
இது ஒன்றும் தானாக நிகழ்ந்து விடாது என கூறியுள்ள அவர் வருங்காலத்தில் பாஜக வலிமை மிகுந்த தேர்தல் சக்தியாக இருக்கும் என கூறியுள்ளார்.
எதிர்வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகாவே வெற்றி பெறுவார்கள் என்று அர்த்தமல்ல, கடந்த 40- 50 ஆண்டுகள் எப்படி காங்கிரஸ் கட்சியை சுற்றியே இருந்ததோ, நாம் அல்லது நமது குடும்பத்தில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து இருப்போம் அல்லது எதிர்த்திருப்போம் அதுபோல அடுத்துவரும் 20-30 ஆண்டுகள் இந்திய அரசியல் என்பது பாஜகவை சுற்றியே சூழலும் என அவர் கூறியுள்ளார்.
பாஜகவை ஒன்று நாம் எதிர்ப்போம் அல்லது ஆதரிப்போம் என்ற நிலையே இருக்கும், அதற்காக பாஜக மட்டும்தான் தனித்து இருக்கும் என்று நினைப்பது தவறு, பாஜக இருப்பதால் எதிர்க்கட்சிகளும் இருக்கும், எதிர்க்கட்சிகள் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் கையிலெடுக்க வேண்டும். இந்த ஜனநாயகத்தின் விடாமுயற்சி என்பது அவரசியம் இது எப்போதும் நல்ல பலனைக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.