ஓசூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் துவக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க *கலைஞரின் வருமுன் காப்போம்* திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஒசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்(உருது) #மாபெரும்_மருத்துவ_முகாமை திரு.Y. பிரகாஷ்mla அவர்களும் ஓசூர் மாநகர மேயர் திரு. S.A.சத்யாEx..MLA அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர். அதே போல் காது கேளாதோருக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மருத்துவ அதிகாரிகள், மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மோசின்தாஜ், இந்திராணி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நிஷார், மணி, முகமது சேக், குமார்,வட்டார மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்