ஓசூரில், அ.தி.மு.க.நிர்வாகிகள் அறிமுக ஆலோசனைக்கூட்டம்

 ஓசூரில்,  அ.தி.மு.க.நிர்வாகிகள் அறிமுக  ஆலோசனைக்கூட்டம்ஓசூர், மே.15

ஓசூரில், மாநகர கிழக்கு பகுதி அ.தி.மு.க.நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது.

ஓசூர் காரப்பள்ளி அருகேயுள்ள ஆர்.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் நடந்த இக்கட்டத்திற்கு, கிழக்கு பகுதி செயலாளர் ராஜி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எம். நடராஜன் வரவேற்றார். இதில் சிறப்புபகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன் (தெற்கு) அசோகா (மேற்கு), மஞ்சுநாத் (வடக்கு) மற்றும் அக்ரோ தலைவர் ஹரிபிரசாத் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர் அழைப்பாளராக, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார். மேலும், மாவட்ட துணைசெயலாளர் கே.மதன், முன்னாள் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன், மண்டல தலைவர்கள் ஜெ.பி., புருஷோத்தம ரெட்டி , ஒன்றிய செயலாளர் ஹரீஷ் ரெட்டி உள்பட பலர் பேசினார்கள். மேலும் இந்த கட்டத்தில், கிழக்கு பகுதி நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

ஓசூர் செய்தியாளர்:E.V. பழனியப்பன்