ஜூன் மாதமே பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை...

 ஜூன் மாதமே  பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை...

 தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு முடிந்து14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது.

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள்.மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து அரசு அறிவித்தபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் படிப்பை உறுதி செய்திட வேண்டும்.

ஏற்கனவே 800  நாட்கள் கொரோனா நோய் தொற்று காலத்தில் வீட்டில் இருந்துவிட்டு படிப்பை மறந்து கல்வி பாழகிப் போனதால் மீண்டும் அந்த தவறை நாம் செய்யக்கூடாது.அரசு அறிவித்தபடி காலதாமதமின்றி உடனடியாக வரும் கல்வியாண்டு தொடங்கிட வேண்டும்.

சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று  கேட்பது வேதனையாக இருக்கிறது.

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பதை மறந்து விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே மாணவர்கள் அடிப்படை கல்வியை மறந்துவிட்டார்கள். எனவேஇனியும் காலதாமதம் செய்யாமல்இந்த கல்வியாண்டில் மகிழ்ச்சிகரமாக இந்த ஆண்டே இந்த மாதமே தொடங்கிட வேண்டும்.

அதில் ஆசிரியர்களும் மாணவர்களும் மாமியாரும் சுணக்கம் காட்ட கூடாது.கல்விப் பணியில் செய்வதற்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கிறது பள்ளிகள் திறப்பதை காலதாமதம் செய்ய செய்ய பெற்றோர் வேண்டிய கடன் சுமை அதிகரிக்கும் பொருளாதார சிக்கல்கள் உருவாகும் மாணவர்களை வீட்டில் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது கெட்டுப் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்படிக்கிற சூழல் இல்லாமல் போகும் படிப்பதை மறப்பார்கள். ஏழ்மை உள்ள பெற்றோர்கள் கூலி வேலைக்கு பிள்ளைகள் அனுப்புவார்கள் விடுமுறை தொடர கூலி தொழிலாளர்கள் அதிகரிக்கும் சமுதாய சீர்கேடுகள் மிதமிஞ்சி போகும்.பெற்றோர்களின் மன உளைச்சலை குறைக்க உடனடியாகபள்ளிகள் திறந்து பிள்ளைகளை பள்ளிக்கு வருவதை உறுதி செய்து பெற்றோர்கள் கணவை இந்த ஆண்டாவது நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம்..

 ஜூன் மாதம் முதல் வாரமே பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து பள்ளிகளும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் இன்ன பிறவற்றை வழங்கி அடிப்படை கல்வியை சொல்லித்தந்து படிப்பதை உறுதி செய்திட ஆர்வத்தைத் தூண்டுவதற்கு ஒரு மாதம் முழுக்க சரியாக போய்விடும் எனவே ஜூன் மாதமே உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஆர்.நந்த குமார் தமிழக முதல்வருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இவரின் இந்த கோரிக்கைக்கு பெற்றோர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 ஜூன் மாதம் 13ம் தேதி பள்ளிகள் திறப்பது  என்று தமிழக அரசு முன்பு எடுத்த முடிவு நல்ல  வரவேற்கத் தகுந்த முடிவாக இருந்தது.  இது கூட சற்று தாமதம் என்று தெரிந்தாலும் பரவாயில்லை.  ஆனால் இப்போது சில ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதற்காக மீண்டும் பள்ளி திறப்பு தள்ளி வைப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக தெரியவில்லை.

ஒரு சிலரின் நன்மையை அவர்களின் சுயநலத்தை மட்டுமே பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

 கர்நாடகத்தில் மே மாதம் 15ஆம்  தேதியே அனைத்து வகை  பள்ளிகளையும் திறந்து விட்டார்கள்.  இந்த விஷயத்தில் தமிழக அரசு சற்று தாமதம் செய்வதாக இருந்தாலும் இன்னும் தாமதம் செய்வது வருந்தத்தக்க விஷயமாகும்.

அவங்க சொல்றாங்க..! இவங்க சொல்றாங்க...!!  அவங்க கேக்குறாங்க...! இவங்க கேக்குறாங்க...  என்று எவங்க சொல்வதையும் கேட்காமல் தமிழகஅரசு துணிவாக தெளிவாக ஒரு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்  என்கிற தெளிவான குரல்  தமிழக மக்களிடமிருந்து வருகிறது...

 என்ன செய்யப்போகிறது  தமிழக அரசு....?