இளையராஜாவை ஜாதியை வைத்து திட்டிய இளங்கோவன்: சூடு சொரணையற்ற திருமாவளவன்...?!

இளையராஜாவை  ஜாதியை வைத்து திட்டிய இளங்கோவன்:  சூடு சொரணையற்ற திருமாவளவன்...?!


தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது என இளையராஜாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார். வறுமையில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது கம்யூனிசம் பேசுவதும், பணம் புகழ் வந்தபிறகு  உயர்சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.  

திமுகவை பொருத்தவரை அதற்கு ஒரு பெரிய வியாதி தொற்றிக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள மக்கள் யாரும் அவர்களை தவிர வேறு எவரையும் புகழ்ந்து பேசி விட கூடாது. அவர்கள் செய்கிற நல்ல காரியங்களுக்கு மகுடம் சூட்ட கூடாது.  அப்படி சூட்டி விட்டால் அவர்களை கடுமையான  விமர்சனங்களால் வாட்டி வதைத்து எடுத்துவிடுவார்கள் . இதற்கு இளையராஜா மட்டும் விதிவிலக்கா என்ன...?

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இலையராஜாவை விமர்சித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பிரச்சார பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி  ஈரோட்டில் மேற்கொண்டார். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆக முடியாது..

பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறார்கள், கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று கூறிக்கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சோல்கிறேன் என்று  உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். 

 கிட்டத்தட்ட அவருக்கு எண்பது வயதாகிவிட்டது. துவக்கத்தில் தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்.

பக்திமான் ஆகலாம் அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம் உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும். அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்?

 அம்பேத்கர் செய்த தியாகம் என்ன, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்தவர் அவர். நினைத்திருந்தால் எத்தனையோ உயரத்திற்கு அவர் சென்று இருக்கலாம். ஆனால் இழி நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் உழைக்க வேண்டுமென பாடுபட்டார். அவருடன் மோடியுடன் ஒப்பிட்டு கேடி தானம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் மோடியை பெரியாருடன் ஒப்பிடகூட தயங்கமாட்டார்கள்.

பெரியார் தாடி வைத்திருக்கிறார், மோடியும் தாடி வைத்திருக்கிறார் என்று காரணம் கூறுவார்கள். ஏன் மோடியை ஹிட்லருடன் ஒப்பிடலாமா, முசோலினியுடன் ஒப்பிடலாமா? இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள். பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா, அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு. சங்கராச்சாரியாரையே ஜெயில் தள்ளிய காலநிலை இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளங்கோவன் இப்படி சாதியை குறிப்பிட்டு பேசியதால், கண்டனங்களும் குவிந்தன.. இவர் மீது பிசிஆர் சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் எழுந்தது.. 

இதைத்தான் டைரக்டர் ரஞ்சித் ட்வீட் போட்டு கண்டித்திருந்தார். ஈவிகேஎஸ் பேச்சு 'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது' என்று பா.ரஞ்சித் விமர்சித்திருந்தார்.


இந்நிலையில் எதிர்பார்த்ததுபோலவே, கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளங்கோவன் மீது போலீசில் புகார் தரப்பட்டது.. சென்னை அடையாறை சேர்ந்த மூர்த்தி என்பவர். இந்த புகாரை தந்திருந்தார்.. 

இப்போது இன்னொரு புகார் தரப்பட்டுள்ளது.. சென்னையைச் சேர்ந்தவர் இளமுருகு முத்து. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளங்கோவன் மீது புகார் தந்துள்ளார்.. 

அதில், ஏப்ரல் 22-ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, மிகவும் அருவருப்பாக பேசி உள்ளார். உலகமே போற்றும் ஒருவரை, ஜாதி குறித்து இளங்கோவன் பேசி இருப்பது, வன்மத்தின் உச்சம்.

இது அவர் மனதில் கிடக்கும் அழுக்கை காட்டுகிறது. இளங்கோவன் பேசிய அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவுகிறது... அதை உடனடியாக முடக்க வேண்டும்... ஜாதி கலவரத்தை துாண்டும் வகையில் பேசியுள்ள இளங்கோவனை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. 

இளங்கோவன் இளையராஜாவை இவ்வளவு கீழ்த்தரமாக பேசியதைக் கேட்டுக் கொண்டு திருமாவளவன் எப்படி தான் சூடு சொரணை இல்லாமல் இருக்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 இளங்கோவன் சொன்ன இந்த வார்த்தையை திமுக கூட்டணி கட்சிகளை சாராத வேறு யாராவது பேசி இருந்தால் இவர்கள் வாய் என்ன சும்மாவா இருந்திருக்கும். தங்கள் விருப்பத்திற்கு தங்கள் வருமானத்திற்கு ஜாதியை பயன்படுத்தும் இந்த தலைவர்கள் இருக்கும் வரை அவர்கள் சமூகம்  மேம்படுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போய்விடும்.

தங்களின் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கு அதன் மூலம் ஒரு MP, 2 எம்.எல்.ஏ.க்கள் பிச்சை வாங்குவதற்கு  ஊர் முழுக்க தங்கள் ஜாதியை சார்ந்தவர்களை  ரவுடிகள் ஆக்கி அதன் மூலம் தன்னை ஒரு தலைவனாக காட்டிக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அம்பேத்கர் அளவிற்கு ஒப்பீடு செய்து கொள்ளும் இவர்களை விட  மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி என்ன அவ்வளவு தரம் தாழ்ந்தவரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.