சி.எம்.சி. ராணிப்பேட்டை வளாகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் அமைக்க ஒப்பந்தம்

 சி.எம்.சி. ராணிப்பேட்டை வளாகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு  மருத்துவ மையம் அமைக்க ஒப்பந்தம்சிஎம்சியின் ராணிப்பேட்டை வளாகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு  மருத்துவ மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த குவெஸ் கார்ப்பரேஷன் ஆகிய அமைப்புகளுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் புதிய வளாகத்தில் குழந்தை மருத்துவ மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும் 300 கோடியில் சிஎம்சி வேலூர் குழந்தைகளுக்கான  சிறப்பு மையம் அமைக்க உறுதி அளித்துள்ளன. ஆரம்ப கட்டத்தில் 350 படுக்கைகளுடன்  இந்த மையம் அமைக்கப்பட்டு, பல்வேறு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை மாற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு சேவைகளை உள்ளடக்கியதாக இந்த புதிய, ‘Fairfax-Quess Block’ அமைக்கப்படும். சிகிச்சை மட்டுமின்றி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியும்  இந்த மையத்தில் நடைபெறும்.

வேலூர் சிஎம்சி இயக்குனர் டாக்டர் ஜே.வி.பீட்டர் கூறுகையில், ''வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணம். 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்தியாவில் சுகாதாரத் தேவைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குவதில் CMC ஒரு வரையறுக்கப்பட்ட பங்கைக் கொண்டுள்ளது. நம் நாட்டிற்கான அடுத்த முன்னுரிமை சிறப்பு குழந்தை மருத்துவம் தான் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். இந்த திட்டம் குழந்தை மருத்துவ நிபுணத்துவத்தில் ஒரு 'கேம்-சேஞ்சராக' இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

நேற்று பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் Fairfax நிறுவனத்தின்  தலைவர் திரு. பிரேம் வட்சா, இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பில் தொடர்ந்து சிறந்த பங்களிப்பை வழங்க, CMC வேலூர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு டாக்டர் பீட்டர் நன்றி தெரிவித்தார். சிறப்பு சுகாதாரத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் அளித்த ஆதரவிற்கும் ஆர்வத்திற்கும் குவெஸ்ஸின் தலைவர் திரு. அஜித் ஐசக் நன்றி தெரிவித்தார்.

குழந்தைகள் சிறப்பு மையம் என்பது கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி வேலூர் ராணிப்பேட்டை வளாகத்தின் 2-ஆம் கட்டத் திட்டமாகும். அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் கட்டம் 1 திட்டம், சாலை போக்குவரத்து விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கும் மற்றும்  சமீபத்திய தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கும், விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தமான சுகாதாரத் தீர்வுகளைக் கொண்டுவருவதற்கும் விரிவான டிராமா சிகிச்சையில் கவனம் செலுத்துகிறது. இந்த வளாகத்தில் 1500 படுக்கைகள், லெவல் 1 ட்ராமா கேர் சென்டர், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 பிரத்யேக அறுவைசிகிச்சை அறைகள், குவாட்டர்னரி கேர் மருத்துவ மற்றும் கதிரியக்க சேவைகள், இருதய சிகிச்சை ஆய்வகங்கள், 250 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், நன்கு பொருத்தப்பட்ட இரத்த சேமிப்பு மற்றும் நன்கொடையாளர் மையம் ஆகியவை அடங்கும். இதில் மேலும் 29 எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை படுக்கைகள், 50 டயாலிசிஸ் படுக்கைகள், 35 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அதிநவீன ஆய்வக சேவைகள் உள்ளடங்கும்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சுரேஷ்