போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து மாபெரும் விளையாட்டுப் போட்டி!!!

 போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மின்னொளி      கைப்பந்து மாபெரும் விளையாட்டுப் போட்டி!!!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பொதுமக்கள் சார்பில் ஹமீதியா மைதானம் விளையாட்டு இளைஞர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மின்னொளிகைப்பந்து மாபெரும் விளையாட்டுப் போட்டி கீழக்கரையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை ஒருங்கிணைப்பு செய்த இளைஞர்களான பாசித்இலியாஸ், செய்யது இப்ராஹிம், டி.கே அசிபர்,அமீன் (இட்டாலி),யாசின் சராப், ஏ.எஸ். கபார் கான் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள். இந்த சிறப்பான விளையாட்டிற்கு சதக் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜனாப். P.R.L.ஹமீது இபுறாகிம்  தலைமை ஏற்று நடத்தினார். 

கடவுள் வணக்கத்தை பைரோஸ் ஓதினார்.பாஸித் இலியாஸ் வரவற்றார்,இதில் தலைமை ஏற்று சதக் டிரஸ்ட்நிர்வாக இயக்குனர் P.R.ட.ஹாமீது இப்ராஹிம்பேசுகையில்:கடந்த ஆண்டுகளில் கீழக்கரை தான் விளையாட்டில் முன்மாதிரியாகத் திகழ்ந்தது. கீழக்கரையிலிருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் முதல் பரிசு பெற்றுள்ளார்கள்.இந்த விளையாட்டு ஆரம்பிப்பதற்கு காரணம் இளைஞர்கள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான், இங்குள்ள இளைஞர்கள் மட்டுமல்ல பல பகுதிகளிலில் இளைஞர்களை தவறான பழக்க வழக்கங்களில் இருந்து மாற்றுவதற்கு முதலாம் ஆண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மாபெரும் மின்னொளிகைப்பந்து போட்டிகீழக்கரை இளைஞர்கள் ஆரம்பித்துள்ளார்கள்ஒவ்வொரு இளைஞர்களின மனதையும் நல்வழிப் படுத்துவதற்கு இந்த போதை விழிப்புணர்வு விளையாட்டு உதவும் என்பதை நான் தெரிவித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று அவர் பேசினார். சதக் டிரஸ்ட் சேர்மனும்,மேலத்தெரு உஸ்வத் துன் கசனா முஸ்லிம் சங்கத்தின் தலைவருமான ஜனாப்.முஹம்மது யூசுப் சாஹிப் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை சுங்கத்துறை ஆணையர் ஜெய்சன் பிரவீன் குமார் டி. ஆர்.பி.ஆர்.எல்.சதக் அப்துல் காதர், ஹமீது பாருக், P.S.டH. சதக் இலியாஸ், மக்கள் சேவை அறக்கட்டையின் தலைவர் உமர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இதில் விளையாட்டுப்போட்டிக்கென ரூ1,00,000, ஐ சதக்டிரஸ்ட்நிர்வாக இயக்குனர் ஹமீது இப்ராஹிம் வழங்கி விளையாட்டு வீரர்களை கௌரவபடுத்தினார். ராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை Dr.கியாதுதீன் ரூ 50ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ 30 ஆயிரம் K.T.M.S அவ்தாத்தும் வழங்கினார்கள்.இந்த விளையாட்டில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் பயிற்சி பெற்றவிளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். போதையை முற்றிலுமாகஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் இதேபோல் வருடாவருடம் ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்று கமிட்டி உறுப்பினர்கள் கூறினார்கள்.மேலும் போதை பொருட்களை ஒழிப்போம் சமுதாயத்தை காப்போம் இது போல் ஒவ்வொரு வருடமும் வழிகாட்டஊக்குவித்த அவர்களை மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தேசிய அளவிலும், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இவர்கள் அதிக அளவு கீழக்கரையில் பங்குபெற வேண்டும் என்பதே கமிட்டியின் நோக்கம் என்று அவர்கள் தெரிவித்தார்கள், மேலும் எங்களுக்கு முழு ஆதரவு தந்த ஹமீதியா மேல்நிலைப்பள்ளி என்.செய்யது சலீம் அவர்களுக்கு கமிட்டியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

ராமநாதபுரம் நிருபர் M.N. அன்வர் அலி,N.A. ஜெரினா பானு