ஆசிரியர் சங்கங்களுக்கு அல்வா கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்....!

ஆசிரியர் சங்கங்களுக்கு அல்வா கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்....!

 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மட்டும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

வெயில் கொளுத்திவரும் நிலையில், முன்கூட்டியே தொடக்க பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. கடந்த மார்ச் மாதமே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து விட்டது..

அப்போதே இந்த மே மாசம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் தமிழக மக்களை சூழ்ந்து கொண்டுவிட்டது.. அதற்கேற்றார்போல், ஏராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது.

 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது... குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.4 வெப்பநிலை பதிவாகியுள்ளது... இதைதவிர, மதுரை, நெல்லை, ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துள்ளது... அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்  தொடங்கி உள்ளது.. இந்த கத்திரி 28ந்தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது... அதனால் இன்றும் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்கிறார்கள்.

இப்படி அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளன.

 கடந்த பிப்ரவரி மாதம்1 முதல்தான் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.. பொது தேர்வுகளை எதிர்நோக்கியும் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.. எனினும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மட்டும் இருந்து வந்தது. அனைவருக்கும் ஆல் பாஸ் அறிவித்து  உடனடியாக விடுமுறை விட வேண்டும் என்கிற கோரிக்கையை  முன்வைத்ததே அவர்கள்தான்.

இதுகுறித்துதான் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.. 

இந்நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என அமைச்சர் கூறியுள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த தெளிவான முடிவு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  All Pass செய்ய சொல்லி சொன்னால் அமைச்சர் இப்படி செய்து விட்டாரே என்று அமைச்சர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த துணிகரமான செயலுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடுமையான வெயிலில் பள்ளிக்கு வந்தால் மாணவர்கள்  வதங்கி விடுவார்கள் என்று சொல்வதெல்லாம்  பொய்.  

அவர்கள் பள்ளியில் இருந்தால் ஒரு இடத்திலாவது ஒழுங்காக இருப்பார்கள் ஆனால் விடுமுறை விட்டுவிட்டால் ஊரெல்லாம் சுற்றி நா வரண்டு, உடல் கருகி உருபடி இல்லாமல் சென்று விடுவார்கள்். அமைச்சர் எடுத்துள்ள இந்த நல்ல முடிவை வரவேற்கிறோம் என்று கூறுகின்றனர்.