பாலாறு திருவிழா ரதயாத்திரை:ஒசூரில் சிறப்பான வரவேற்பு :

 பாலாறு திருவிழா ரதயாத்திரை:ஒசூரில் சிறப்பான வரவேற்பு 

ஒசூர், மே 16:

பாலாறு திருவிழாவை முன்னிட்டு நேற்று ஒசூர் கர்நாடக எல்லையான ஜுஜுவாடியில் பாலாறு ரதயாத்திரைக்கு நதிநீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் டாக்டர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ரதயாத்திரை  ஒசூரின் முக்கிய வீதிகள் வழியாக மீரா மஹாலுக்கு வந்தடைந்து. அங்கு சேவா பாரதி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சாமிகள் நீர் நிலைகளை காப்பதை குறித்து பேசினார்கள். 

நேற்று காலை பாலாறு தொடங்கும் கர்நாடக மாநிலம் பிரம்மகிரி மலையில்  தொடங்கிய இந்த ரதயாத்திரை, ஜூன் 5ம் பாலாறு முடியும் செங்கல்பட்டு மாவட்டம் கடலூர் சின்ன குப்பம் என்கிற  இடத்தில் நிறைவு பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் நாயகன் 

அகில பாரதிய சந்நியாசிகள் சங்க தலைவர் தவத் சுவாமி ராமானந்தா முன்னிலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சுவாமிகள் சிவராமானந்தா, மேகனாந்த, 

சங்கர சக்தானந்தா, ராம தேவானந்தா, நாளாந்தபுரி, கார்த்தி கேயானந்தா, பாலரகு நாதானந்தா, பால தேவானந்தா, ஆனந்தானந்தா, கோக்ஷந்தா, பிரவின், ஹரி, குப்பச்சி, நதிநீர் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் சண்முகவேல், செயலாளர் சரவணன், லையன் வைவிஎஸ் ரெட்டி, பாஜக மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், ஒரு ஒருகிணைப்பாளர் சுதா நாகராஜ்,  PMC கல்லூரி செயலாளர் குமார்,  ஈஷா நரசிம்மன், அட்விகேட் அனந்தகுமார், பாஜக பொத்ராஜ் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன நிர்வாகிகள், ஒசூரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர்: E.V.பழனியப்பன்