இளநரையை கருப்பாக மாற்றுவதற்கு எளிதான வழி...!

 இளநரையை கருப்பாக மாற்றுவதற்கு எளிதான வழி...!

இளநரையை கருப்பாக மாற்றுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. அவை எல்லாவற்றையும் விடவும் சுலபமான ஒரு முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே நம்மில் பலபேர் வெள்ளை முடியை உடனடியாக கருப்பாக மாற்ற வேண்டும் என்று சொல்லி ஹேர் டை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஹேர் கலர் நமக்கு கருப்பாக இருக்கக்கூடிய முடியைக் கூட ஒரு சில நாட்களிலேயே வெள்ளையாக மாற்றும் தன்மையுடையது என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியாது.

அது மட்டுமல்லாமல் செயற்கையாக தலைக்கு டை அடிப்பதன் மூலம் நமக்கு பக்கவிளைவுகள் நிறைய வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆகவே, ஹேர் கலரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு இப்படி இயற்கையாக சொல்லப்படும் வழிமுறைகளை பின்பற்றி வந்தால் ரிசல்ட் கிடைக்க கொஞ்சம் தாமதம் இருக்கும். ஆனால் அந்த ரிசல்ட் நிரந்தரமாக தங்கும்.


சரி, இன்றைக்கு இயற்கையாக நம்முடைய தலை முடியை கருப்பாக மாற்ற நாம் பயன்படுத்தப் போகும் இலை கற்பூரவல்லி இலை தான். இந்த இலையை பற்றி பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சளி இரும்பல் தொந்தரவுக்கு இந்த இலையை சாப்பிடுவார்கள். சில பேர் இதை ஓமவள்ளி இலை என்ற கூட சொல்லுவார்கள். வாசம் நிறைந்த ஒரு நல்ல மூலிகை செடி இது. இந்த செடியில் இருந்து 10 இலைகளை மட்டும் பறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

நன்றாக இலைகளை கழுவி விட்டு காம்புகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் மிக்சி ஜாரில் போட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். அரைத்த விழுதை அப்படியே ஒரு சின்ன கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். இதில் விட்டமின் E கேப்ஸ்யூல் – 1, உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு எலுமிச்சைப் பழச்சாறு – 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை அப்படியே உங்களுடைய நரை முடியின் மேல் அப்ளை செய்து விட வேண்டும்.

40 லிருந்து 45 நிமிடம் வரை இது உங்களுடைய தலையில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு ஷாம்பூ சீயக்காய் எல்லாம் போடக்கூடாது. வெறும் தண்ணீரில் உங்களுடைய தலையை அலசி விட வேண்டும். இந்த பேக்கை தலையில் போட்டதும் லேசாக எரிச்சல் இருப்பதாக சில பேருக்கு தெரியும். இருந்தாலும் பரவாயில்லை. அது அந்த இலையின் தன்மைதான். அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இந்த பேக் வேர்கால்களில் பட்டாலும் எந்த பிரச்சனையும் வராது.

தொடர்ந்து 10 வாரங்கள் இந்த பேக்கை வாரத்தில் 3 நாட்கள் என்ற கணக்கில் உங்களுடைய தலையில் போட்டு வாருங்கள். நிச்சயமாக நரை முடியில் நிறம் மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும். சில ஆண்களுக்கு தாடி மீசையில் கூட வெள்ளை முடிகள் இருக்கும். அந்த இடத்தில் கூட இந்த பேக்கை பயன்படுத்தலாம் தவறு கிடையாது. பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு கூட இந்த நரை முடி பிரச்சனை உண்டு. அவர்களுக்கும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.