தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்கு...! தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி கோரிக்கை....

தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்கு...!  தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி கோரிக்கை....

அனுப்புதல்...

கே.ஆர். நந்தகுமார் மாநில செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். No.6. ஏகாம்பரம் தெரு. பம்மல். (Po ) சென்னை.75.

 பெறுதல்.. மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம். புனித ஜார்ஜ் கோட்டை. சென்னை.9.

வழி.. மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்..

பொருள்... தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கும் கல்வி கட்டணம் மிக மிகக் குறைவு..இப்பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்வி கட்டணமாக நிர்ணயிக்க வேண்டி விண்ணப்பம்.....

 ஐயா... வணக்கம்...

தமிழகத்தில்  சுமார் 20,000 நர்சரி பிரைமரி பள்ளிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ,ஐ.பி, ஐ ஜி சி எஸ் இ, கேம்பிரிட்ஜ் பள்ளிகள் சுயநிதி அடிப்படையில் அரசின் அங்கீகாரம் மட்டும்  பெற்று அரசின்  சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எந்தவித நிதி உதவியும் பெறாமல் சுமார் ஒரு கோடி மாணவர்களுக்கு தரமான கல்வி தந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை தந்து 50,000 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை இயக்கி தமிழகத்தில் தரமான  கல்வி  வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு மற்றும் அரசின் வரி வருவாயை பெருக்கி ஒருநாளும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யாமல் தமிழக அரசுக்கும் பள்ளிகளுக்கும் பாலமாகயிருந்து செயல்பட்டு வருவது தனியார் பள்ளிகள் என்று சொன்னால் மிகையாகாது  ..

 தமிழகத்தில் தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் மற்றும் தமிழக பாடநூல் கழக புத்தகங்களை தனியார் பள்ளிகள் மட்டும் பணம் கொடுத்து வாங்கி வருகிறோம்.

 சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள போது சமச்சீர் கல்வி  கட்டணம்... அனைவருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வழங்கிட வேண்டும் என்பதே எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும்..

 ஆம்,,தமிழக  அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு தமிழக அரசு கல்விக்காக என்ன செலவு செய்கிறதோ அதையே கல்வி கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்துதர  வேண்டி

 கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம்..

 ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம். மிகக் குறைந்த கட்டணம். நடைமுறைச் செலவுகள் கூட செய்யமுடியாத கல்வி கட்டணத்தை கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நிர்ணயிப்பதால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிகளை நிர்வகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..

 குறிப்பாக தனியார் பள்ளிகள் மட்டும் அங்கீகாரம் பெறும்போது சுகாதாரச் சான்றிதழ், தீயணைப்பு துறையின் தடையின்மைச் சான்று, கட்டிட உறுதி சான்று, கட்டிட உரிமைச் சான்று, டிடிசிபி, சிஎம்டிஎ., எல். பி. எ கட்டிட அனுமதி, பி.எஃப், இ.எஸ்.ஐ, சொத்துவரி, தொழில்வரி, வருமானவரி, ஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, மின் கட்டணம், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் ஊதியம்,,  பள்ளி ஆண்டு விழாக்கள், விளையாட்டு விழாக்கள், பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை நாள்தோறும் உயர்த்துதல், கல்வி கற்க  பள்ளி மாணவர்களை அழைத்து வரும்  வாகன செலவு, டீசல், பராமரிப்பு செலவு, சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ், எஃப் சி,

 சிசிடிவி கேமரா, ஜிபிஆர்எஸ் கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ரெப்லெக்டர் ஸ்டிக்கர், பள்ளி வாகனங்கள் வாங்க கட்டிடங்கள் கட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்த வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை, கோ கரி கூலர் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் கட்டணம் சேர்க்கவில்லை. ஆண்டுதோறும் அங்கீகார செலவு, என எண்ணற்ற செலவுகளை இந்த போட்டி யுகத்தில் கம்ப்யூட்டர் யுகத்தில் பல்வேறு விளம்பரங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு விருதுகள் சீருடைகள் மற்றும் தரமான கல்வி  தந்து ஓய்வின்றி தொடர் கண்காணிப்பில்  அனைத்து அரசு பொது தேர்வுகளிலும்  100% வெற்றி தந்தால் மட்டும் தான் பள்ளிகள் தொடர்ந்து சிறப்பாக நடத்திட  முடியும் என்பது தாங்கள் அறியாததல்ல..

 இப்படிப்பட்ட சூழலில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தனியார் பள்ளிகளின் கஸ்ட, நஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் பள்ளிகளின் உண்மையான வரவு, செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பள்ளிகளின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்காமல் பள்ளி நிர்வாகிகளின் கருத்துக்களை முழுமையாக கேட்காமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதாச்சாரத்தை பாட வாரியாக கணக்கெடுத்துக் கொள்ளாமல் ஆண்டு தோறும் உயரும் விலைவாசிகள் செலவீனங்கள் மற்றும் அங்கீகாரம்  பெறுவதற்கான சான்றுகள் இதற்கான துறைவாரியான கையூட்டுகள் இன்னபிற செலவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

 மேற்கண்ட செலவுகளை எல்லாம் கணக்கில் எடுத்து கல்வி கட்டணம்  நிர்ணயித்தால் நீதியரசர் நிர்ணயிக்கும் கல்விக்கட்டணம் நியாயமாக இருக்கும்.

அப்போதுதான் பள்ளிகளும்  பெற்றோர்களை ஏமாற்றாமல் நியாயமான கட்டணம் வசூலிக்க முடியும்.

 பள்ளிக்கு பள்ளி வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்போது அந்தப் பள்ளிகளுக்கு மட்டும் தேவைப்படுமானால் அரசு கூடுதலாக கல்வி கட்டணம் நிர்ணயிப்பது  தவறு இல்லை.

 அதை விடுத்து மிக மிக குறைந்த கட்டணம் ஒரு பள்ளிக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு மாணவனுக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் வாங்கிக் கொள் என்று உத்தரவிட்டு இருப்பது எந்த வகையில் நியாயம் எப்படி பள்ளியை நடத்துவது?.

 கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் வரவு செலவு கணக்குகளை பார்க்கும் ஊழியர்கள் யாரும் ஆடிட்டர்கள் அல்ல . சாதாரண பட்டதாரிகளே.

 நியாயமான கட்டணம் நிர்ணயித்தால் தான் நிறைவான சம்பளம் அனைவருக்கும் வழங்க முடியும்..

 எந்தச் சூழ்நிலையிலும் எப்பொழுதும் விலைவாசிகள் குறைந்த வரலாறு கிடையாது..

 ஊரடங்கு கொரானா காலத்தில்  பள்ளிகள் செயல்படாத போது பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாத போது அரசாங்கமே கல்வி கட்டணம் கட்டவேண்டாம் என  அறிவித்தபோது நீதிமன்றம் 75% கட்டினால் போதும் என்ற போதும் கல்வி கட்டணம் கட்டவில்லை என்றாலும் டி. சி கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்த போது பெற்றோர்கள் எப்படி பள்ளி கட்டணம் செலுத்துவார்கள்..

இந்தச் சூழ்நிலையில் ஊரடங்கு கால வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்து

 அதன் அடிப்படையில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் .

 இந்த குழப்பங்கள் எல்லாம் தீர வேண்டுமென்றால் தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ள இந்த நேரத்தில் சமச்சீர் கல்விக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்.

 தமிழக அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்விக் கட்டணமாக.

நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பிரச்சனையும் தீரும் சமூக அமைதி ஏற்படும்.. சட்டம் ஒழுங்கு சீர்படும்..

 எனவே மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழு சம்பந்தமான அரசாணையில் மாற்றம் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி கட்டணமாக...

 தமிழக அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்விக் கட்டணமகா நிர்ணயம் செய்து தரவேண்டும். கூடுதலாக கல்விக்கட்டணம் வேண்டிய பள்ளிகள் தங்கள் வசதி வாய்ப்புகளை  கல்வி கட்டண நிர்ணயக் குழு முன்பு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஆய்வுக்குழு பள்ளிகளை ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயிப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

 அரசின் பெரும் பணச் சுமையை, பணிச்சுமையை  குறைத்து தரமான கல்வி தரும் தனியார் பள்ளிகள் அமைதியான முறையில் சமாதானமாக சந்தோசமாக கல்விப் பணியாற்றி இவருக்கும் தரமான கல்வி தந்து

தமிழ் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் எங்கள் நியாமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்..

 மேற்கண்ட கோரிக்கை நிறைவேற தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க....

வருகிற 19.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழு முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து கோரிக்கை மனு வழங்க திட்டமிட்டுள்ளோம்..

 நன்றியுடன் உண்மையுள்ள.. 

கே. ஆர்.நந்தகுமார் மாநிலச் செயலாளர்.

 பேராசிரியர். ஏ. கனகராஜ் .

மாநிலத் தலைவர்.

13.04.2022.

 நகல்..

 உயர்திரு. மாண்புமிகு. நீதியரசர். பாலசுப்பிரமணியன் அவர்கள். தலைவர் தமிழ்நாடு  தனியார் பள்ளி கல்வி கட்டணம் நிர்ணய குழு. டிபிஐ வளாகம். சென்னை.-6.

 உயர்திரு.பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள்.

உயர்திரு. பள்ளிக்கல்வித் துறை ஆணையாளர் அவர்கள்..