ஸ்டாலினின் அழைப்பை புறக்கணித்த மோடி; டெல்லியில் நடந்த அரசியல் லாபி என்ன...? சுவாரஸ்ய தகவல்கள்.....
டெல்லி திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி, மூத்த பத்திரிகையாளார் இந்து என்.ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திமுக அலுவலக திறப்பு விழாவுக்காக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே டெல்லி சென்ற ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தார். அப்போது, டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் அழைத்தார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோரை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்துக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் அவர்களையும் திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு அழைத்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி
நடைபெற்ற திறப்பு விழாவில் பாஜகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து டெல்லி பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, முதலில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டதாக கூறுகிறார்கள்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “தேசிய அரசியலில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார். தேசிய அரசியலில் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டும் நிகழ்வாக டெல்லி திமுக அலுவலக திறப்பு விழா பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த விழாவில் கலந்து கொள்வது பாஜகவுக்கு சரியாக இருக்காது என்பதால், கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை” என்றார்கள்.
மரியாதை நிமித்தமாக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் நேரடியாக வைத்தாரே என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தபோது, பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் ஸ்டாலின் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டுகின்றனர்.
“ஜனநாயகத்தைக் காக்க நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு இணைய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை காக்க ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து அனைத்து கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
“ஜனநாயகத்தைக் காக்க நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு இணைய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை காக்க ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து அனைத்து கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர கட்சியில் உள்ள தனிநபர்களின் விமர்சனம் செய்வதில்லை” என்றார் ஸ்டாலின். அப்படி இருக்கையில், பாஜகவின் கொள்கைக்கு எதிரான கட்சிகள் ஓரணியில் திரளும் நிகழ்வில் பாஜக எப்படி கலந்து கொள்ளும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இது கூட தெரியாமல் பாஜக அரசியல் செய்யுமா என்ன...?
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட ஒரு கடமைக்காக தான் மோடியையும் மற்ற அமைச்சர்களையும் விழாவிற்கு
அழைத்தாரே தவிர உண்மையிலேயே இவர்கள் வந்துதான் நிகழ்ச்சி நடக்கும் என்பதெல்லாம் கிடையாது.
அதற்கான முக்கியத்துவம் அந்த நிகழ்வில் இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நிகழ்வில் பங்கேற்பார்கள்.
பாஜகவினர் ஒன்றும் அந்த அளவிற்கு ஞானமற்றவர்கள் அல்ல என்பதைத் தான் இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது