டிரைவிங் லைசென்ஸ் ரினியூவல் செய்ய ஆர்டிஓ அலுவலகம் போகத் தேவையில்லை!
இனிமேல் டிரைவிங் லைசென்ஸ் ரினியூவல் செய்ய ஆர்டிஓ அலுவலகம் போகத் தேவையில்லை!’’
இதற்கான Parivahan எனும் வலைதளத்தை நேற்று நம் தமிழக முதல்வர் திறந்து வைத்தும் பேசினார். இதுபோல் பல விஷயங்களுக்கு நாம் ஆர்டிஓ அலுவலகம் போகத் தேவையில்லை என்கிறது அந்த அறிக்கை.
டிரைவிங் லைசென்ஸை ரினியூவல் செய்ய…
லைசென்ஸில் முகவரி மாற்றம் செய்ய…
தொலைந்து போன உங்கள் லைசென்ஸை டூப்ளிகேட் எடுக்க…
முக்கியமாக… LLR எனப்படும் Learners Licence எடுக்க!
இப்படி முக்கியமான நான்கு விஷயங்களுக்கு நாம் ஆர்டிஓ அலுவலகம் போய், காக்கத் தேவையில்லை என்றொரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
. இதற்குப் பெயர் Contactless Service Operation. சொல்லப்போனால், இந்த ஆப்பரேஷனை மத்திய அரசு 2018–லேயே அறிவித்து விட்டது. ஆனால், நம் மாநில அரசு நேற்றிலிருந்துதான் இதை இம்ப்ளிமென்ட் செய்திருக்கிறது.
https://parivahan.gov.in/parivahan/ எனும் இணையதளத்தில் போய்… நீங்கள் விரும்புவதை ஆன்லைன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்து கொள்ளலாம்.
இதற்கு முக்கியமாக உங்களிடம் இருக்க வேண்டிய ஆதாரம் – ஆதார் கார்டு! LLR எடுப்பதற்கு உங்கள் ஆதாரங்களை அப்லோடு செய்தால்… ஒரு சின்னப் பரீட்சை வைக்கிறார்கள். வழக்கம்போல் போக்குவரத்து சிக்னல்கள்… விதிமுறைகள்… சிம்பல்கள் என்று பல விஷயங்களை நீங்கள் சரியாகப் பரீட்சை எழுத வேண்டும்.
(கூகுளில் சர்ச் பண்ணி பாஸ் ஆகிடலாமா எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). அதிகபட்சம் 8 மார்க் எடுத்து பாஸ் ஆகிவிட்டால்… சின்னக் கட்டணம் செலுத்தி ஆன் தி ஸ்பாட்டிலேயே LLR –யை ப்ரின்ட் எடுத்துக் கொள்ளலாம். இந்த LLR வைத்திருக்கும் 30 நாட்களுக்குப் பிறகு உங்களுக்குத் தோதான நாளில் 8 போட்டு ஓட்டிக் காட்டி, முறையான டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த எல்எல்ஆர் 150 நாட்கள் வரை செல்லுபடியாகும்.