சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கனிமவளத்துறை அதிகாரி வேடியப்பன்

 சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கனிமவளத்துறை அதிகாரி வேடியப்பன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மலைகளை உடைத்து கடத்தும் சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கனிமவளத்துறை அதிகாரி வேடியப்பன் 

கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை துணை இயக்குனராக பதவி ஏற்ற ஓரிரு மாதங்களிலேயே கனிமவளத் துறை துணை இயக்குனர் வேடியப்பன்தனது சிங்கம் முகத்தை காட்டத் துவங்கிவிட்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அரசுக்கு சொந்தமான மலைகளை உடைத்து கற்களை கடத்தி பல கோடி கணக்கில் பணம் பார்த்த சமூக விரோதிகள் தற்போது அதிர்ந்துபோய் பயத்தில் உறைந்துள்ளனர் எனலாம்.

அதேபோல் சில ஏக்கர் பரப்பளவில் உள்ள கல்குவாரிகளை அரசிடம் அனுமதி பெற்று   அதை விட 50 சதவீதம்  அளவிற்கு கல் உடைத்து சட்டவிரோதமாக கடத்தும் கும்பல் செயல்பட்டு வந்தது.

ஒரே அனுமதி ரசீதை வைத்துக்கொண்டு நாளொன்றுக்கு 10 முதல் 20 லாரிகளில் கல் கடத்துதல்.

மதுரைக்கு அடுத்து தமிழகத்திலேயே இரண்டாம் இடத்தில் அதிக அளவில்  கிரானைட் கற்கள் அதிக அளவிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில்சட்டவிரோதமாக கிரானைட் கற்களை உடைத்து கடத்தி வரும் கும்பலை செயல்பட்டு வந்தது

இதேபோல் அனுமதி இல்லாமல் அரசு புறம்போக்கு இடங்களில் மண் மற்றும் நொரம்பு மண் கடத்தல் மாவட்ட பகுதிகளில்வெகு ஜோராக நடைபெற்று வந்தது.

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் கங்கலேரி ப பகுதியில் அனுமதிக்கும் மீறி 20-மடங்கு அதிகமமாககற்களை உடைத்து கடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு 2 கோடியே 75 லட்ச ரூபாய். அபராதம்.போட்டு தனது அதிரடி வேலையை ஆரம்பித்தார்

இதேபோல் கங்கலேரி மலைப்பகுதியில் அனுமதி இல்லாமல் பல ஜெனரேட்டர்களை வைத்து ஜெ.சி.பி இந்திரம் வைத்து பல கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக கற்களை வெட்டி கடத்திய கும்பலை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய ராட்சச ஜெனரேட்டர்கள் மற்றும் லாரிகள்மற்றும் ஜேசிபி எந்திரங்களை ஆகியவற்றை கைப்பற்றிசமூக விரோதிகளுக்கு அரசு இரும்புக்கரம் என்னவென்பதை காண்பித்தார்

இதேபோல் ஆந்திர மாநிலம்  பகுதியில் இருந்து வேப்பனப்பள்ளி வழியாக வாரம் ஒன்றுக்கு சுமார் 25 லாரிகளில் ஆந்திர மாநிலம் அனுமதி ரசீது மற்றும் தமிழக அனுமதி ரசீது ஆகியவற்றை போலியாக தயாரித்து கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார்..

 மகாராஜகடைசாலையில் உள்ள ஆத்துகாவாய் பகுதியில் ராமனாம்பட்டிமலையில்சட்டவிரோதமாக 30க்கும் மேற்பட்ட நபர்களை வைத்து ஜேசிபி பொக்லைன் எந்திரங்களைபயன்படுத்தி மலைகளை உடைத்து தள்ளிய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும் தண்டத்தொகை விதித்து நடவடிக்கை எடுத்தார்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் நடைபெறுகின்ற சமூகவிரோத செயல்களைதாங்களாகவே விட்டுச் செல்லும்அளவிற்கு நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தந்து தான் ஒரு சிறந்த அதிகாரி என்பதை காட்டி வருகிறார்

இவரைப்போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற அதிகாரிகளும் செயல்பட்டால் தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னோடி மாவட்டமாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி