பள்ளி மாணவர்கள் பயமின்றி செல்ல போதுமான போக்குவரத்து வசதி வேண்டும்

 பள்ளி மாணவர்கள் பயமின்றி செல்ல போதுமான போக்குவரத்து வசதி வேண்டும்


உளுந்தூர்பேட்டை நகராட்சி திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு கிராமத்திற்கு மாலை நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் படிக்கின்றனர் பள்ளி முடிந்து மாணவர்கள் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை . பள்ளி முடிந்து மாணவர்கள் செல்ல 5 மணி அளவில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது இதனால் மாணவர்கள் பஸ்ஸின் மேற்கூரையில் படியிலும் தொங்கிக் கொண்டு செல்லும் அபாய நிலை உருவாகின்றது இதனை சீர்படுத்த போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு போதுமான பேருந்து வசதி செய்து கொடுத்தால் மாணவர்களின் உயிர் காக்க பேருதவியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்: G. முருகன்