பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை...
முதலமைச்சர் துபாய் பயணத்தில் ஆவின் உபபொருட்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை வரவேற்றும் - பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தகோரியும் - தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம கவுண்டர் தலைமை வகித்தார்.
இந்த மகா சபை கூட்டத்தில் தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தில் ஆவின் நெய் வழங்கியதற்கும், பொதுத்துறை, அரசு நிறுவனங்கள், கோவில்களில், ஆவின் உபபொருட்களை கொள்முதல் செய்ய ஆணையிட்டமைக்கும், முதலமைச்சர் துபாய் பயணத்தில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஆவின் உபபொருட்களை விற்பனை செய்ய போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை வரவேற்றும். தமிழக அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியும், உற்பத்தி மானியமாக ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் வழங்க கோரியும், கால்நடை தீவனங்கள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு 50% மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தில் ஆவின் பால் அல்லது பால் பவுடர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேஷன் கடைகளில் மாதம்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்நடைகளுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை வசதிகளை செய்து தர வேண்டும், ஆவின் பால் நெய் மற்றும் உபபொருட்களை அண்டை மாநிலமான இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் , கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். என்பன 13 கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆலோசகர் நசீர் அஹமத் மாவட்ட செயலாளர் ராஜா மகளிர் அணி தலைவி பெருமா மேற்கு மாவட்ட தலைவர் வண்ணப்பா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேட்டி : ராமகவுண்டர் மாநில தலைவர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி