தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

 தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

ராமநாதபுரம் ஏப்-19

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா  கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம்,நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் தீ தொண்டுநாள் வாரத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி திருஉத்திரகோசமங்கைகோயில் வளாகத்தில் 18.4.2022 அன்று நடைபெற்றது.இதில் ஏர்வாடி நிலைய தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் அருள்ராஜ் கலந்துகொண்டு பேசுகையில்:- ஆடைகள் மீது தீ பற்றி நாலோ அல்லது புகை சூழ்ந்த இடங்களில் மாட்டிக் கொள்ள நேரிட்டாலோ

 எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில்

 ஏர்வாடி தீயணைப்புத்துறை முன்னணி தீயணைப்பாளர் ஜெயராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் மருத்துவர் ஆனந்த், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுலைமான், முகம்மது அஜிஸ், நுண்ணுயிரியல் துறை பேராசிரியை விஜயகுமாரி, ஜைனப்தைமியா, ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். கல்லூரி முதல்வர் ராஜபுதீன்,துணை முதல்வர் மருத்துவர் சதக்கத்துல்லாஹ், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவ மாணவியர்களை பாராட்டினர். முடிவில் தீயணைப்பு துறையின் சார்பில் தீ தொண்டுநாள் வாரம் 2022, குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு