தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு தேர்வு கிடையாதா...? பள்ளிக் கல்வித் துறை விளக்கம்..!

தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு தேர்வு கிடையாதா...? பள்ளிக் கல்வித் துறை  விளக்கம்..!


1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறு என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதல்மைச்செயலாளர் காகர்லா உஷா கூறும்போது, தேர்வுகள் யாருக்கும் ரத்துசெய்யப்படாது. தேர்வு நடைபெறாது என்று வெளிவந்த செய்து தவறானது என்றும், அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ஆம் தேதி ஆகும். 2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி தொடங்கும். அதேசமயம் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்று சொல்வது வெறும் வதந்தி, பொய் இதை யாரும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.