கிருஷ்ணகிரியில் அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து நடத்திய பிரமாண்ட எருதுவிடும் விழா

 கிருஷ்ணகிரியில்  அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து நடத்திய பிரமாண்ட எருதுவிடும் விழாகிருஷ்ணகிரியில் நடைபெற்ற அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து நடத்திய பிரமாண்ட எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து ஓடிய  காளைகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து நடத்திய பிரம்மாண்டமான எருதுவிடும் விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்குஎருதுவிடும் விழா குழு தலைவரும்  வெங்கடேஸ்வரா ஜுவல்லரி தங்க நகை கடை உரிமையாளர் சுரேஷ்.தலைமை வகித்தார்.அ.தி.முக

பொதுக்குழு உறுப்பினர்சதீஷ்குமார் பங்கேற்று எருதுவிடும் விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழாவில் ஆம்பூர் வேலூர்.ஓசூர்.சூளகிரி குடியாத்தம்.ஆந்திர மாநிலம் குப்பம். ரமகுப்பம்.மற்றும் கர்நாடக மாநில பகுதியிலிருந்து

 400 -க்கும் மேற்பட்டகாளைகள்  பங்கேற்றன

விழா குழுவினர் நிர்ணயித்திருந்த150 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க சீறிப்பாய்ந்த காளைகளை பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்..

முதல் பரிசாக 3 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாயும்.

இரண்டாம் பரிசாக 2-லட்சத்து 22 ஆயிரத்து 222 ரூபாயும்.

மூன்றாம் பரிசாக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 111  ரூபாயும்.என 60-க்கும் மேற்பட்ட பரிசுகள்வழங்கப்பட்டன.

விழாவை. அதிமுக. திமுக.கட்சியை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அனுராதா ஸ்டோர் சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி நகர காவல்  கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் போலீசார்  ஈடுபட்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி