சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா!!

 சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா!!

 ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா மற்றும் மாவட்ட சிலம்பம் போட்டி கராத்தே போட்டி அன்னதான நிகழ்ச்சி   மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் பள்ளி மாணவ மாணவியர்களின் சிலம்பப் போட்டி, கராத்தே போட்டி, அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,சூரங்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் தெய் வநாதன்,ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் தங்கம், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் முன்னாள் தாசில்தார் பாலுசாமி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் குமார்,சூரங்கோட்டை செயலாளர் பாக்கியம், தலைவர் சண்முகவேல் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 இதற்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கம், ராமநாதபுரம் மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கம், மற்றும் டி. கே.வி. விளையாட்டு அகாடமி ,ஆகியோர் மிக சிறப்பாக செய்திருந்தனர் முன்னதாக மேடைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் படத்திற்கு சூரங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேவநாதன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சி.பாலுச்சாமி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதனை அடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சங்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு