மகளிர் சுய உதவி குழுவினருக்கு புதிய வாய்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு...!

மகளிர் சுய உதவி குழுவினருக்கு புதிய வாய்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு...!


மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்கவும் மத்திய பாஜக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி அவ்சார் என்ற திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக் குழுவினர் காண விற்பனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 கிராமப்புற சமுதாயத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக சுய உதவி குழுக்கள் உள்ளன.

பெண்கள் மற்றும் ஆண்கள் சிறு சிறு குழுக்களாக இணைந்து வருமானத்திற்கான ஆதாரங்களை சுதந்திரமாக ஏற்படுத்திக்கொள்ள இது உதவுகின்றது. இந்நிலையில் சுய உதவி குழுக்களை வலுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவ்வகையில் விமான நிலையங்களில் சுய உதவிக் குழுவினருக்கு இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில் சுய உதவி குழு வினரால் நடத்தப்படும் விற்பனை மையம் விரைவில் திறக்கப்படுகிறது. இதில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 200 சதுர அடி இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் விற்பனை மையம் அமைக்க விரும்புகின்ற சுய உதவிக்குழுவினர் இந்தியா விமான நிலையங்கள் ஆணையத்தின் https://www.aai.aero/en/node/add/shg-user-detail என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.