ஓசூரில், மண் என்ற தலைப்பில் நடைபெற்ற குறும்பட போட்டிகளுக்கான விருதுகள் 2022 வழங்கும் விழா.

 ஓசூரில், மண் என்ற தலைப்பில் நடைபெற்ற குறும்பட போட்டிகளுக்கான விருதுகள் 2022 வழங்கும் விழா. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சினிமா ரெண்டேவோ  & டேலண்ட் டிரைப் இவெண்ட்ஸ் இணைந்து மண் வளம் காக்கும் நோக்கத்தில் மண் என்ற தலைப்பில் நடத்திய குறும்படப் போட்டி விருது விழா நடைபெற்றது.   

இந்தப் போட்டி மனித குலத்தின் இருப்புக்கு மண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், மண் வளத்தின் அபாயகரமான வீழ்ச்சிக்கு எதிரான நடவடிக்கைக்கான அழைப்பைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி அறிவிக்கப்பட்டு மார்ச் 12ம் தேதி வரை நடைபெற்று. 

நாடு முழுவதிலுமிருந்து பெறப்பட்ட மொத்தம் 40 பன்மொழி குறும் திரைப்படங்களில் பொதுப் பிரிவினருக்கான 27 குறும் படங்களும், மாணவர்கள் பிரிவினருக்கான 17 குறும்படங்களும் போட்டியில் பங்கேற்றிருந்தன. இதில் விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் மல்டி கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் வசந்த் சாய் மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகை மற்றும் எழுத்தாளர் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர் மதிப்பாய்வு செய்து இறுதிப் பட்டியலை வெளியிட்டனர்.

அதன்படி,  முதலாவதாக, பொது பிரிவினருக்கான போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த எஸ் வி குமார் இயக்கிய ,ஹோலிக் என்று கன்னட குறும் திரைப்படம் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசு மற்றும் விருது பெற்றது.

இரண்டாவதாக மாணவர் பிரிவினருக்கான போட்டியில் மதுரையைச் சேர்ந்த இப்ராஹிம் மற்றும் அஸ்வத் ஆகியோர் இயக்கிய,  மண்மதன் என்று குறும் திரைப்படம் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசு முற்றும் விருது பெற்றது. 

மூன்றாவதாக பிரபலமானவர்களுக்கான போட்டியில், சென்னையைச் சேர்ந்த வாசுதேவன் பார்த்தசாரதி இயக்கிய, விளைமண் என்று குறும் திரைப்படம் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் விருது பெற்றது.

நான்காவதாக சிறப்பு நடுவர் தேர்வுப் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலாயுதம் என்பவர் இயக்கிய விதை என்ற குறும் திரைப்படம் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் விருது பெற்றது.

ஓசூர், செயின்ட் ஜோசப் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரு.  எஸ்.ஏ. சத்யா - மேயர், ஓசூர் மாநகராட்சி, ஸ்ரீ.  கே.ஏ.மனோஹரன் - ஐஎன்டியுசி தேசிய செயலாளர், டாக்டர் எஸ்.ராஜவேலு - தொல்லியல் அறிஞர் மற்றும் கையெழுத்து அறிஞர், தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வசந்த் சாய் மற்றும்  இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் ஆகியோர் போட்டிகளில் தேர்வானவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

இந்த விருது வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை, நிகில் முருகன் ,ஷைலஜா செட்லூர்  (அமைப்பாளர் - பிலிம் கிளப் சினிமா ரெண்டேவோ), செல்வின் தாமஸ்- ( அமைப்பாளர் - டேலண்ட் டிரைப் இவெண்ட்ஸ்) நரசிம்மன்.  எஸ் - (தலைவர், ஏற்பாட்டுக் குழு, டேலண்ட் டிரைப் இவெண்ட்ஸ்) ஆகியோர் செய்திருந்தனர்.

.ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்