டவுன் பஸ் போல Metro ரயிலிலும் மகளிருக்கு இலவச பயணம்....!

டவுன் பஸ் போல Metro ரயிலிலும் மகளிருக்கு இலவச பயணம்....!

மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியன்று அனைத்து பெண் பயணிகளுக்கும் வரம்பற்ற இலவச பயணத்தை வழங்குவதாக கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் பெண்கள் கொச்சி மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம். கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் அறிவித்துள்ளதன்படி, பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் எந்த நிலையத்திற்கும் இலவசமாக ஏறி இறங்கலாம்.

இது தவிர, மார்ச் 8ஆம் தேதி 10 முக்கிய மெட்ரோ நிலையங்களில், பெண் ஊழியர்கள் மட்டுமே நிலையக் கட்டுப்பாட்டாளர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொச்சி மெட்ரோவின் பல்வேறு நிலையங்களில் கவர்ச்சிகரமான போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.