பள்ளிக்கல்வித் துறையா.....? அல்லது புள்ளிக் கல்வித் துறையா...?!

பள்ளிக்கல்வித்  துறையா.....? அல்லது  புள்ளிக் கல்வித் துறையா...?!

பள்ளிக் கல்வித்துறை வெறும் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் துறையாக மாறிக் கொண்டிருப்பதால்

இனி அதை *புள்ளிக்  கல்வித்துறை* என்று அழைக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் அனைவரும் தகவல்களை தரும் எந்திரங்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள். டேட்டா என்ட்ரி ஆபீஸர் போல் நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்களுக்கு தரக்கூடிய டேட்டாக்கள் பயன் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

கொரோனா காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை  சரி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் இப்பொழுது இருந்தபோதிலும் ஆனால் அதில் உள்ள செயல்பாடு அப்படி இல்லை. 

காரணம் கற்றல் இடைவெளியை சரி செய்ய மாணவர்களோடு அதிக நேரத்தை செலவு செய்ய ஆசிரியர்கள் பணிக்கப்பட வேண்டும். அப்படி அல்லாமல் அவர்கள் கைபேசி யுடனும் கணினியுடனும் தினமும் டேட்டா என்ட்ரி செய்வதில் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

இந்த நிலைகள் தொடருமானால் ஒரு ஆரோக்கியம் நிறைந்த சமூகம் உருவாகுமா என்ற கேள்வி குறி சமூக ஆர்வலர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கௌன்சிலிங் நடத்துவதால் மாணவ சமூகத்திற்கு கற்றலில் பாதிப்பு உண்டாகியுள்ள நிலையில். பல்வேறு டேட்டா என்ட்ரி வேலைகளையும் இக்காலத்தில் ஆசிரியர்களிடம் திணிப்பதால் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் கற்றல் திறனுக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கும் சோதனை உண்டாகலாம் என்பதே எதார்த்தமான உண்மை.

பள்ளிக்கல்வித்துறையில் செயல்பட்டுவரும்  அதிகாரிகள் வட்டார வள மைய அதிகாரிகள் கேட்டதையே இன்னும் எத்தனை நாளைக்குத் தான் திரும்பத் திரும்ப  கேட்டுக் கொண்டிருப்பார்கள்...?  இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா....??