இலவச கண் பரிசோதனை முகாம்!!!
ராமநாதபுரம் மார்ச்-12
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது இதில் உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை இவைகள் பரிசோதனை செய்யப்பட்டது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு