கொட்டாவூர் பகுதியில் கன்றுவிடும் விழா

 கொட்டாவூர் பகுதியில்  கன்றுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகேகொட்டாவூர் பகுதியில் நடைபெற்ற கன்றுவிடும் விழாவில்200-க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் கம்மம்பள்ளி ஊராட்சி கொட்டாவூர் கிராமத்தில் ஸ்ரீ சென்றாயசுவாமி' திருவிழாவை முன்னிட்டு கன்று விடும் திருவிழா நடைபெற்றது.

விழாவில் கிருஷ்ணகிரி ஓசூர் ,சூளகிரி திருப்பத்தூர். ஜோலார்பேட்டை. வேலூர்.ஆந்திரமாநிலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன.

விழா குழுவினர் நிர்ணயிரருந்த தூரத்தை குறைவான நேரத்தில் கடக்கும் கன்றுகளுக்கு முதல் பரிசாக 25-ஆயிரம் ரூபாயும் 

இரண்டாம் பரிசாக 20-ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 15-ஆயிரம் ரூபாயும் என 45-பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்களபங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கொட்டாவூர் ஊர் பெரியவர்கள் .மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி