அரசுப் பள்ளிகளுக்கு அடுத்த சனிக்கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வேலை நாள்

 அரசுப் பள்ளிகளுக்கு அடுத்த சனிக்கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வேலை நாள்

பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைக்க பெற்றோர்களுடன் கலந்தோசிக்க வேண்டும் என்பதால் பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் மார்ச் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் மார்ச் 20 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதன்படி பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே மே மாதத்தில் இருந்து பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகிறது. ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு சரியாக பாடம் புகட்டாத காரணத்தினால் தற்போது வெகு விரைவாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதன்படி வரும் மார்ச் 20 ஆம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த கூட்டத்தில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களது குழந்தையுடன் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெற்றோர்களில் இருந்து 20 பேர் தேர்ந்தெடுத்து ஒரு குழுக்களாக பிரிக்கப்படும். அந்த குழுவிற்கு தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடக்க உள்ளது.. இதில் கிட்டத்தட்ட 52 லட்சம் பெற்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.. தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றிலேயே இது மிக முக்கிய நிகழ்ச்சி ஆகும்.. அரசு பள்ளிகளில் இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்... இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என்றார்.

முன்னதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.. அத்ல் உள்ளதாவது: 'அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. என அறிவிக்கப்பட்டுள்ளது.