ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் திமுக தலைவர் கருணாநிதி யால்வாழ்த்து மடல் பெற்றவர்!

 ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் திமுக தலைவர் கருணாநிதி யால்வாழ்த்து மடல் பெற்றவர்!

ராமநாதபுரம் மார்ச் - 04

ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் திமுக 23 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும் சுயேச்சை 3 இடங்களிலும், 1 அதிமுக இரண்டு இடங்களிலும், பாஜக 1 இடத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நகரசபை கமிஷனரும் தேர்தல் அலுவலருமான சந்திரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து நகரசபை தலைவர் திமுக வேட்பாளராக ஆர்.கே.கார்மேகம் (வடக்கு) நகர் செயலாளரை திமுக தலைமை அறிவித்து அதற்கான தேர்தல் இன்று (4.3.2022) காலை நடைபெற்றது. அதில் 23 வாக்குகள் பெற்று ஆர்.கே.கார்மேகம் வெற்றி பெற்றார். அவருக்கு வெற்றி சான்றிதழை கமிஷனரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சந்திரா வழங்கினார். இதனையடுத்து மதியம் நகர்மன்றத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர். பிரவீன் தங்கம் (தெற்கு) நகர் செயலாளர் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இவரை எதிர்த்து யாரும் போட்டி இல்லாததால் துணைத் தலைவராக வெற்றிபெற்றார். வெற்றிசான்றிதழை நகரசபை கமிஷனர் சந்திரா வழங்கினார். தேர்தல் மிக மிக அமைதியாக நடைபெற்று முடிந்தது நகரசபை கமிஷனர் சந்திரா அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண் டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். 2003ல் அதிமுக ஆட்சியிபோது நடைபெற்ற இடைத்தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலராக கார்மேகம் வெற்றி பெற்ற இந்த வெற்றியை பாராட்டி அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கார்மேகத்திற்கு வாழ்த்து மடல் எழுதி இருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு