அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும்; அன்பில் மகேஷ் உறுதி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும்; அன்பில் மகேஷ்  உறுதி

இந்த ஆண்டு கொரோனாவின் 3வது அலை தொடங்கிய நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஆண்டைப் போலவே ஆன்லைன் முறையில் வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்றது. பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் வரும் மே மாதத்தில் இறுதி தேர்வு நடைபெறும் எனவும், ஆன்லைன் அல்லாமல் நேரடியாகவே மே மாதத்தில் இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு கடந்த மாதம் வரை இந்த ஆண்டு தேர்வுகள் கிடையாது கடந்த ஆண்டு போல் ஆல் பாஸ் என்று பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் பேசி வந்து சரியான முறையில் பாடம் இருக்கிறது லூட்டி அடித்துக்கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் தேர்வு என்று சொன்னது மிகப் பெரிய கடுப்பாக இருக்கிறது.

இப்ப என்ன செய்வாங்க..…?!