கற்றல் பணிகளை தாண்டி பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த படுவதால் கல்விப் பணி மேற்கொள்ள இயலுமா ஆசிரியர்கள் கேள்வி....??

கற்றல் பணிகளை தாண்டி  பல்வேறு  பணிகளில் ஈடுபடுத்த படுவதால் கல்விப் பணி மேற்கொள்ள இயலுமா  ஆசிரியர்கள் கேள்வி....??

கற்றல் பணிகளை தாண்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு நிர்வாக பணிகளில் ஈடுபடுத்த படுவதால் மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மைகாலமாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு புள்ளி விவரங்களை சேகரித்து  EMIS எனப்படும் பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணையப்பக்கத்தில் பதிவேற்ற உத்தரவிடுகின்றது.

இவ்வாறு பல்வேறு விபரங்களையும் தகவல்களையும் சேகரிக்க சொல்லி பள்ளிக்கல்வித்துறை அண்மைக் காலங்களில் அதிகமாக உத்தரவு பிறப்பிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் இதுபோன்ற நிர்வாகப் பணிகளில் தொடர்சியாக  ஈடுபடுவதால் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாகவும்  ஆசிரியர்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று ஆசிரியர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாணவர்களின் உடல் நலன் மற்றும் இடைநிற்றல் ஏற்படுவதற்கான காரணங்களை அறியும் பொருட்டு பல்வேறு தகவல்களை திரட்ட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தற்போது பிரச்சனையாக உருவாகியுள்ளது. அந்த வகையில் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா? மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்கின்றதா?  மாணவர்கள் பான் ஜர்தா போடும் பழக்கம் உள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளை  கேட்டு அவ்விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் காலப் பணிகள், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் போன்ற பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் மாணவர்களின் விவரங்களை சேகரிப்பது, வருகை பதிவேடு பதிவேற்றம் செய்து சமர்ப்பிப்பது, தேர்வு வினாத்தாள்களை சமர்ப்பிப்பது, பள்ளி மேஜை நாற்காலி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து சமர்ப்பிப்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில்

மாணவர்கள் உடல் நலன் சார்ந்த அந்தரங்க கேள்விகளையும் கேட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளதை ஏற்க முடியாது என்கின்றனர் ஆசிரியர்கள்.

அந்த வகையில் ஆசிரியர்கள் நிர்வாகம் சார்ந்து மேற்கொள்ளும் பணிகள் கீழ்கண்டவாறு உள்ளது

1.ஆசிரியர் வருகை Online 

2. மாணவர் வருகை Online

3.சால சித்தி online
4.மாணவர் மனசு Online
5.Eye Screening online
6.BM I online
7.தினசரி Grant பதிவு
8.Noon Meal 21 கேள்வி ஒவ்வொரு மாணவர்க்கும் online
9.மாணவர் விவரம் ஆதார் Personal Detail online
10.EMIS update Online
11.நூலக புத்தகம் online
12.பள்ளி புரவலர் Online
13.பள்ளி நலதிட்ட பதிவு

online

14.SC, MBC ஊக்கத்தொகை Online
15. ஆசிரியர் விவரம் online,

16.பணி மாறுதல் கலந்தாய்வு online

17.மாணவர் சேர்க்கை பதிவு Online

18.மாணவர் TC Online
19.Civil Work online

20.இல்லம்.தேடி கல்வி திட்டம் சார்ந்த பணி

இவ்வாறு பல பணிகளையும் செய்து விட்டு இதற்கு இடையே மாணவர்களுக்கு கல்விப் பணி மேற்கொள்ள இயலுமா என ஆசிரியர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.