தி.மு.க.வை பதம் பார்க்கத் தயாராகும் பா.ஜ.க. .....! அடுத்த நகர்வு என்ன....?

தி.மு.க.வை பதம் பார்க்கத் தயாராகும் பா.ஜ.க. .....! அடுத்த நகர்வு என்ன....?

தனித்து போட்டியிட்டதால்தான் வெற்றி என்று பாஜகவும், கூட்டணி இல்லாததால்தான் தோல்வி என்று அதிமுகவும் ஆளுக்கு ஒரு பக்கம் காரணம் சொல்லி கொண்டிருந்தாலும், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது பாஜக மேலிடம்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, அக்கட்சிக்கு மாற்று நாங்கள்தான் என்பதை மறுக்காமல் சொல்லி வருகிறார் மாநில தலைவர் அண்ணாமலை.. 

ஒரு வலுவான கட்சிக்கு நிகராக, தங்களது பாஜகவை நிறுத்தி கொள்ளும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. தேசிய கட்சிகள் இதற்கு தயாராகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தமிழக பாஜகவும் சில வியூகங்களை இப்போதே கையில் எடுத்துள்ளன.

அதன்படி, படித்தவர்கள், இளைஞர்கள், பிரபலங்கள், விஐபிக்கள் போன்றோரை கட்சிக்குள் இணைத்து, கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் முதல்கட்டமாக இறங்கி உள்ளது.. மாநில தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றபோது, இந்த காரியத்தைதான் முதலில் செய்தார்.. அதன் பலனாக குஷ்பு முதல் விபி துரைசாமி வரை எண்ணற்றோரை மாற்று கட்சிகளில் இருந்தும் கொண்டு வந்தார்..

 அண்ணாமலை பொறுப்பேற்றபோது, உறுப்பினர் சேர்க்கையைவிட, கட்சியை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.. இப்போது, மீண்டும் பல புதுமுகங்களை இணைத்து, பலப்படுத்த தமிழக பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அடுத்ததாக, திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியில் இறங்க போவதாக தெரிகிறது.. இந்த முறை திமுக மீதான பொய் வாக்குறுதிகள் குறித்த பிரச்சாரங்கள் ஓரளவு எடுபடவும், அதே பாணியில் சென்று, திமுகவின் பொய் பிரசாரங்களை முறியடிக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.. 

 அதேபோல, மத்தியஅரசின் பல்வேறு திட்டங்களால் தமிழகத்திற்குஒதுக்கப்பட்ட நிதி, அவற்றினால் அடைந்த பயனாளிகளின் விபரங்களை மக்களிடம் சேர்ப்பதே இதன் முதல்பணியாக இருக்கும் என்கிறார்கள்..

முக்கியமாக, சமூக ஊடகங்கள் வாயிலாக, அனைத்து தரப்பு மக்களிடமும் மத்திய அரசின் திட்டங்களையும் சேர்க்கும் பணியை, தமிழக பாஜக தீவிரப்படுத்தி உள்ளது.. பாஜகவை சோஷியல் மீடியாவில் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் வகையில், அவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும் இந்த சோஷியல் மீடியா பணிகள் இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மத்திய அரசின் திட்டங்களில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள், நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளனவாம்..

அவற்றையும் தமிழில் மொழி பெயர்த்து, சோஷியல் மீடியா மூலமாக மக்களிடம் சேர்க்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.. கடந்த வாரம் பிரதமர் மோடி, தேர்தல் ரிசல்ட் அன்று அண்ணாமலைக்கு போனை போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும், அப்போது, சில அறிவுறுத்தல்களை கூறியதாகவும் செய்திகள் கசிந்தன..

 இதுபோக, திமுக அரசு மீது எழும் குற்றச்சாட்டுகள், புகார்கள், போன்றவைகள் குறித்தும் அவ்வப்போது ரிப்போர்ட் தயார் செய்து மேலிடத்துக்கு அனுப்பும் பணிகளும் இனி ஆரம்பமாகலாம் என்கிறார்கள்..

அதாவது, "கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் கிடைத்த வெற்றி எதிர்பார்த்தது என்றாலும், சென்னை மாநகராட்சியில், ஒரே ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது.. எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்..

 அடுத்த தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டாம்.. இப்போதுள்ள நிலைமையே தொடருங்கள்.. ஆனால் எம்பி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்" என்றும் அறிவுறுத்திய நிலையில், இதுவும் பாஜகவுக்கு புது தெம்பூட்டி வருகிறது. ஆக மொத்தம், பாஜகவுக்கான அடுத்த இன்னிங்ஸ் இனிதே ஆரம்பமாகி உள்ளது..!

இதன் முதல் கட்டமாக திமுகவின் கொத்தடிமைகளாக மாறி வாய்க்கு வந்த படியெல்லாம் ஜால்ரா தட்டி பேசிக்கொண்டிருக்கும் திருமாவளவனுக்கும், அழகிரிக்கும் அடுத்த ஆப்பு  தயாராகிக் கொண்டுள்ளது.

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்