இந்தியர்களின் முட்டாள்தனம்......?!

 இந்தியர்களின் முட்டாள்தனம்......?!

அலோபதி உருவான ஐரோப்பாவின் நிர்ப்பந்தமும்,

பாரம்பரியம் மிக்க இந்தியாவின் முட்டாள்தனமும்.

 1. எட்டு மாதக் குளிர் காரணமாக கோட் சூட் அணிவது அவர்களின் நிர்ப்பந்தம், 

**கடும் வெப்ப காலத்திலும் திருமணம் நாளன்று கோட் சூட் அணிந்து, கோட் சூட்டோடு ஊர்வலமாக அழைத்துச் செல்லுவது,

-இந்திய முட்டாள்தனம்....

2. Fresh உணவு கிடைக்காததால், அழுகிய மாவில் இருந்து பீட்சா, பர்கர், நூடுல்ஸ் சாப்பிடுவது ஐரோப்பாவின் நிர்ப்பந்தம். **கல்யாண விருந்து போல மெனு வைத்து கொண்டும் ₹ 400/-க்கு ரொட்டி  (பீட்சா) சாப்பிடுவது,

-இந்திய முட்டாள்தனம்....

3. Fresh உணவு அனைவருக்கும் தினமும் கிடைக்காத காரணத்தாலும், ஃப்ரீசரைப் பயன்படுத்துவது ஐரோப்பிய நிர்ப்பந்தம்.

**தினமும் மார்கெட்டில் ஃப்ரெஷ் காய்கறிகள் கிடைத்தும், அதை வாங்கி வந்து ஒரு வாரமாக ஃப்ரீசரில் அடுக்கிய காய்கறிகளைச் சாப்பிடுவது,

-இந்திய முட்டாள்தனம்....

4. மூலிகைகள் பற்றிய அறிவு இல்லாததால், மிருகங்களின் சதையில் இருந்து மருந்து தயாரிப்பது அவர்களின் நிர்ப்பந்தம்.

**அதே வேளையில் சித்தமருத்துவம், ஆயுர்வேதம் போன்ற சிறந்த பின்விளைவற்ற பாரம்பரிய மருத்துவம் நம்மிடம் இருந்தும், இறைச்சி மருந்துகளை உபயோகிப்பது,

-இந்திய முட்டாள்தனம்....

5. தானியம் மிகுதியாக இல்லாத காரணத்தால் விலங்குகளை உண்பது, அவர்களின் நிர்பந்தம்.

**அதே வேளை 1600 வகையான பயிர்கள் இருந்தும், சுவைக்காக அப்பாவி விலங்குகளை கொல்வது, 

-இந்திய முட்டாள்தனம்....

6. லஸ்ஸி, பால், ஜூஸ் போன்றவை இல்லாததால், சர்க்கரை கரைசலை குளிர்பானம் என்ற பெயரில் குடிக்க வேண்டிய நிலை அவர்களின் நிர்ப்பந்தம். **36 வகையான இயற்கை பானங்கள் இருந்தும், குளிர்பானம் என்ற விஷத்தைக் குடித்து நம்மை நாமே நவீனமாகக் கருதுவது,

-இந்திய முட்டாள்தனம்....

இயற்கையை போற்றுவோம் - இந்தியாவின் பாரம்பரியத்தை மீண்டும் கடைபிடிக்கவும் , இயற்கை உணவுகளை உண்ண பழகுவோம் - உடல் ஆரோக்கியம்,  மன ஆரோக்கியம், பாரம்பரியத்தை காப்போம்.