வீட்டை உடைத்து கொலைமிரட்டல் விடுத்த தம்பிகள் மீது கிருஷ்ணகிரி புகார்.

வீட்டை உடைத்து கொலைமிரட்டல் விடுத்த தம்பிகள் மீது கிருஷ்ணகிரி  புகார்.

குண்டர்களுடன் வந்து வீட்டை உடைத்து கொலைமிரட்டல் விடுத்த தம்பிகள் மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சகோதரி புகார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி, பஞ்.,க்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் கெளசர் சுல்தானா, 42. இவருக்கு சொந்தமான வீடுகளில் குண்டர்களுடன் வந்து அடித்து, உடைத்து, கொலைமிரட்டல் விடுத்த தன் தம்பிகள் மீது குடும்பத்தினருடன் எஸ்.பி.,அலுவலகத்தில் புகாரளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரியை சேர்ந்த எனக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவருடன் திருமணம் நடைபெற்று தற்சமயம் நான் அங்கேயே வசித்து வருகிறேன். எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எனக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் வீடுகள் கிருஷ்ணகிரியில் உள்ளது. அதை பராமரிப்பதற்காக எனது சகோதரர்கள் அனிஸ் அஹமத், ஹசன் அஹமத் ஆகியோர் பொறுப்பில் விட்டிருந்தேன். இதை பயன்படுத்தி அவர்கள் என் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டனர். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி வந்த நான், இதுகுறித்து தட்டிக்கேட்ட என்னையும் தரக்குறைவாக பேசி, எனக்கு சொந்தமான வீட்டின் ஜன்னல், கண்ணாடி, கதவுகளை உடைத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் குண்டர்களுடன் வந்து, குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். சத்தம்கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்தபோது அவர்களையும்  மிரட்டினர். அதற்கான ஆதாரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். கொலைமிரட்டல் விடுத்த எனது தம்பிகள் மற்றும் குண்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி