கரூர் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம்

கரூர் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம்

இன்று கரூரில்  தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் கரூர் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது..

கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்..

 இக்கூட்டத்தில் DEO /CEO அலுவலகத்தில் கொரோனா காலத்தில் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து எந்த தகவலும் தர வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கட்டிடங்களுக்கான சொத்துவரி இஎஸ்ஐ பள்ளிகளில் தொடர் அங்கீகாரம் டிடிசிபி கட்டிட அனுமதி நியாயமான  கல்விக் கட்டணம் நிர்ணயம் ஆர்டி இ நிலுவை பாக்கி உடனே வழங்கிட அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகள் ஆன பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்குவது,மூன்றாண்டுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

ஓர் ஆண்டு அங்கீகாரம் வழங்கினால் வாங்கக்கூடாது.மூன்றாண்டு  அங்கீகாரத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டி பிரச்சாரத்தை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

மேற்கண்ட  கோரிக்கைகளை நாள்தோறும் நாளிதழ்களில்  வலியுறுத்தி  அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தி தீர்மாணங்கள்இயற்றி அரசின் கவனத்தை ஈர்த்து  அனைத்து பள்ளிகளின் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது..

 இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பேங்க் சுப்பிரமணியம் மாநில பொதுச் செயலாளர் கே..ஆர்..நந்தகுமார். திருச்சி மாவட்ட தலைவர் நிர்மலா. கே.சந்திரசேகர்  மாவட்டத் தலைவர் சிதம்பரம். மாவட்ட செயலாளர் தண்டபாணி. சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி பாண்டியன்.. கிங்ஸ்  பார்க் பள்ளி நிர்வாகி வழக்கறிஞர் தமிழ்.ராஜேந்திரன். மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.